"தென் ஆப்ரிக்க அதிபர் ஜேகப் ஜூமா விரைவில் பதவி விலகுவார்"

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சிரியா: அரசு தாக்குதலில் 130 பேர் பலி

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசு படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், கடந்த திங்களன்று, அப்பகுதியில் அரசு தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆஃப்பிரிக்க அதிபர் பதிவு விலகுகிறார்

ஊழல் குற்றச்சாட்டால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தென் ஆஃப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா விரைவில் பதவி விலகுவார் என்று அந்நாட்டு துணை அதிபர் சிரில் ராமபோசா கூறியுள்ளார்.

ஆளும் ஆஃப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான அவர் அதிகார மாற்றம் தொடர்பாக ஜுமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

வடகொரியா ராணுவ அணிவகுப்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தென்கொரியாவில் தொடங்கவுள்ள நிலையில், தனது ராணுவம் நிறுவப்பட்ட 70வது ஆண்டை அனுசரிக்கும் விதத்தில் வடகொரியா இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தவுள்ளது.

ஒத்திகையின்போது பியாங்யாங் விமான நிலையம் அருகே 13,000 வீர்கள் காணப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது.

முடிவுக்கு வருகிறது ஜெர்மனி குழப்பம்

ஜெர்மனியில் தேர்தல் முடிந்த பின்னரும் நிலையான அரசு அமையாமல், பல மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

அமைச்சரவை பகிர்வு தொடர்பாக, அதிபர் ஏங்கலா மெர்கலின் பழைமைவாத கட்சி, சோசியலிச ஜனநாயக கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :