You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - பெயருக்காக நடக்கும் பல்லாண்டுகால போராட்டம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு
பனிப்பொழிவிற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவை மாஸ்கோ சந்தித்துள்ளதால் அந்நகரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, விமானப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கான சராசரி பனிப்பொழிவு கடந்த சனிக்கிழமையன்று ஒரே நாளில் பொழிந்து, 1957 ஆம் ஆண்டு பதிவை முந்தியுள்ளது
தென்னாப்பிரிக்க அதிபர் பதவி விலக நெருக்கடி
தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஞாயிற்றுக்கிழமை அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கு அழுத்தம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜூமாவை ஏஎன்எஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் சிரில் ராமபோசா தலைவராக நியமிக்கப்பட்டார்.
பெயருக்காக நீடிக்கும் பல ஆண்டுகால போராட்டம்
கிரீஸில் பல தசாப்த காலமாக மாசிடோனியா என்ற பெயரினால் நிலவி வரும் பிரச்சனையை வலியுறுத்தி குறைந்தது 1,40,000 மக்கள் தலைநகர் ஏதென்ஸின் தெருக்களில் குவிந்துள்ளனர்.
தங்களது நாட்டின் வடக்கு பிராந்தியத்தின் பெயரான மாசிடோனியாவை, கிரீஸுக்கு அருகிலுள்ள நாடு தனது பெயராக பயன்படுத்துவதை எதிர்த்து பல ஆண்டுகாலமாக பிரச்சனை நீடித்து வருகிறது.
விபத்திற்கு பயணிகள் ரயிலே காரணம்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ரயில்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்திற்கு தவறான தண்டவாளத்தில் வந்த பயணிகள் ரயிலே காரணம் என்று அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் 116 பேர் காயமடைந்தனர்.
பிற செய்திகள்:
- “இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு
- யு19 உலகக்கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஐந்து வீரர்கள் இவர்கள்தான்
- "நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்"
- `என் படுக்கையை பகிர்ந்து, திருமணத்துக்கு மறுத்தவனின் குழந்தையை நான் ஏன் வளர்க்கிறேன்?’ #HerChoice
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :