ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

துப்பாக்கிக்சூடு: 2மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிக்சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயதான மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெனிசுவேலாவின் ஏப்ரல் மாதம் தேர்தல்

ஏப்ரல் முடிவுக்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்படும் என வெனிசுவேலா அரசு அறிவித்துள்ளது. வெனிசுவேலா அதிபராக மீண்டும் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியுள்ளார்.

டிரம்பிடம் விசாரணை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரித்துவரும் முல்லரின் சிறப்பு விசாரணைக் குழு, வரும் வாரத்தில் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடத்த உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.

லிபியாவில்கார் வெடிகுண்டு

லிபியாவில் ஏற்பட்ட கார் வெடிகுண்டில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :