ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
நடிகை மரணம்

பட மூலாதாரம், Ecaster
ஆஸ்திரேலியாவின் பிரபலமான தொலைக்காட்சி தொடரான ஹோம் அன் அவே- வில் நடித்த ஜெஸிகா உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை மரணமடைந்தார். மூன்று வாரங்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி 29 வயதான ஜெஸிகா இறந்தார்.

நல்ல அறிவாற்றல்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். அவருடைய அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி எனக்கு கவலை இல்லை என்று மருத்துவர் ரோனி ஜாக்சன் கூறி உள்ளார்.

உதவிகள் நிறுத்தி வைப்பு

பட மூலாதாரம், Reuters
ஐ.நா நிவாரண அமைப்பு மூலமாக பாலத்தீனத்திற்கு வழங்க இருந்த 65 மில்லியன் டாலர் உதவித் தொகையை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா அதிகாரி, அமெரிக்காவின் இந்த செயல்பாடானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

டிரம்ப் ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு முன் ஆஜராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாலியல் சுரண்டல்... கண்ணீர்

பட மூலாதாரம், Reuters
நாங்கள் எவ்வாறு அமெரிக்க மருத்துவர் லாரி நாசரால் பாலியல் ரீதியான துன்புறத்தலுக்கு உள்ளானோம் என்று பல பெண்கள் வக்குமூலம் அளித்துள்ளனர். கைல் ஸ்டீஃபனும் அதில் ஒருவர். தான் ஆறு வயது முதலே, லாரி நாசரால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானேன். இதை நான் அந்த சமயத்தில் வீட்டில் சொன்ன போது,யாரும் என்னை நம்பவில்லை என்றார். கைல் தான் எந்த அளவுக்கு லாரியால் துன்பத்திற்கு உள்ளானேன் என்பதை விவரிக்க விவரிக்க, அந்த விசாரணை அறையில் இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழ தொடங்கினார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












