You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் டிரம்ப்: 10 தற்புகழ்ச்சி மேற்கோள்கள்
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''நான் இனவெறியாளன் இல்லை, இதுவரை நீங்கள் பேட்டி எடுத்தவர்களில் நானே இனவெறி குறைந்தவன்'' என்று கூறியுள்ளார்.
ஆஃப்ரிக்க நாடுகளை மலத்துளை நாடுகள் என டிரம்ப் விமர்சித்ததாக செய்திகள் வெளியான பிறகு, அதை மறுத்து டிரம்ப் இவ்வாறு கூறினாலும், தன்னை மேதை என்றும், அதிக அறிவாளி என்றும் புகழ்ந்து கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை.
டொனால்ட் டிரம்ப்பின் புகழ்பெற்ற பத்து தற்பெருமை மேற்கோள்கள்:
"க்ரைஸ்லர் நிறுவனம் மெக்ஸிகோவிலிருந்து மிச்சிகனுக்கு மிகப்பெரிய ஆலையை மாற்றப்போவதாக அறிவித்திருப்பது விவேகமான முடிவு. நன்றி க்ரைஸ்லர். டிரம்ப் / பென்னுக்கு வாக்களித்த மிச்சிகன் வாக்காளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இதுபோல் இன்னும் நிறைய காத்திருக்கிறது!" -11 ஜனவரி 2018, டிவிட்டர்.
"நன்றி ஆடம் லெவின், @ Foxandfriends க்கு அளித்த பேட்டியில், டொனால்ட் டிரம்ப் போன்ற சிறந்த அதிபரை எங்கள் நாடு இதுவரை பார்த்ததில்லைஎன்று கூறியதற்கு நன்றி" - 11 ஜனவரி 2018, டிவிட்டர்.
".... உண்மையில், மன உறுதியும், புத்திசாலித்தனமும். என் வாழ்க்கையின் மிகப்பெரிய இரண்டு சொத்துகள். ஹிலரி கிளின்டனும் இவற்றை வைத்தே மிகவும் கடினமாக விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் தோல்வியடைந்தார். மிகவும் வெற்றிகரமான தொழிலதிபரான நான், தொலைகாட்சி நட்சத்திரம்..... முதல் முயற்சியிலேயே அமெரிக்காவின் அதிபரானேன். அதற்கு காரணம் நான் அழகானவன் எனபதல்ல, புத்திசாலி என்பதே காரணம் .... மேலும் மிகவும் நிலையான புத்திசாலி என்பதே இதற்கு காரணம்! " -6 ஜனவரி 2018, டிவிட்டர்.
"பதவியேற்றுக் கொண்டதில் இருந்து நான் வணிக விமானப் போக்குவரத்தில் மிகவும் கண்டிப்பாகவே இருந்திருக்கிறேன். அதனால் 2017ஆம் ஆண்டில் இறப்பு எதுவுமே இல்லை என்றும் இது சாதனை மற்றும் பாதுகாப்பான ஆண்டு என்று அறிக்கை வந்திருப்பது நல்ல செய்தி!" -2 ஜனவரி 2018, டிவிட்டர்.
"உண்மையில் நான் பணிவானவன் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னை புரிந்து கொண்டிருப்பதைவிட மிகவும் பணிவானவன் என்று நினைக்கிறேன்."- 18 ஜூலை 2016, சிபிஎஸ் நேர்காணல்.
"நான் பெண்களிடம் மிகவும் மரியாதை கொண்டவன். கட்டுமானத் துறையில் மற்றவர்களைவிட பெண்களுக்கான கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்தவன் நான்."- 7 ஜூன் 2016, ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணல்
"என் வாழ்க்கை வெற்றி பெறுவதை பற்றியது. என் வாழ்க்கை இழப்புகளுக்கானது அல்ல." -18 ஆகஸ்ட் 2015, டைம்
"தோல்வியுற்றவர்களும், வெறுப்பவர்களும் மன்னிக்கவும், ஆனால் என் ஐ.க்யூ. மிகவும் அதிகம், அதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! தயவு செய்து முட்டாள்தனமானமாகவோ பாதுகாப்பில்லை என்றோ வருத்தப்பட வேண்டாம், அது உங்கள் தவறு அல்ல."- 8 மே 2013, ட்விட்டர்
"நான் பணக்காரனாக இருப்பது என்பது என் அழகின் ஒரு அம்சம்." - 17 மார்ச் 2011, குட் மார்னிங் அமெரிக்கா
"என் ட்விட்டர் சக்திவாய்ந்ததாக மாறிவிட்டது. உண்மையில் என் எதிரிகளை உண்மை கூற வைக்கும் அளவு வலுவானதாக மாறிவிட்டது."- 17 அக்டோபர் 2012, ட்விட்டர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்