You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா-இஸ்ரேல் உறவில் நெருக்கடியா? இஸ்ரேல் பிரதமரின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துமா?
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸில் தொழிற்சாலைகளின் ஒன்றின் உள்ளே முழுவதும் ஆளில்லா விமானங்களைப் பார்க்கலாம். சில விமானங்களின் பாகங்கள் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. சிலவற்றை ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆளில்லா விமானங்கள் பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் உள்ளது.
இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலை தலைநகர் டெல் அவிவிற்கு அருகில் ஜெருசலேமில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பெரும் பாதுகாப்பில் உள்ள தொழில்துறை வளாகத்திற்குள் செல்ல பிபிசிக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது. முழு சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஹெரான் ஆளில்லா வான்வழி விமானத்தைப் பார்க்க காத்திருக்கிறோம். இந்த ஆளில்லா விமானங்கள் இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ளன. வானிலிருந்து உளவு பார்ப்பதை தவிர, இதனால் ஏவுகணையும் ஏவ முடியும்.
இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் யூசுப் ரூபினும் ஒருவர். '' இந்தியா எங்களின் வாடிக்கையாளர் மட்டுமல்ல, ஒரு கூட்டாளி. நாங்கள் 25 வருட உறவைப் பகிர்ந்து கொள்கிறோம்'' என்கிறார் அவர்.
இரு நாடுகளும் நெருங்கிய பாதுகாப்பு கூட்டாளிகள். கடந்த 25 வருடத்தில் 10 பில்லியின் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியா உடனான உறவுகளை இன்னும் ஆழமாக்கப் பல விஷயங்களை சுமந்துகொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த விஷயத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு என்பது முக்கியமான துறை.
இரு நாடுகள் இடையிலான நல்லுறவு சமீப காலத்தில் பின்னடைவுகளை சந்தித்தன. ஐ.நா சபையில் பாலத்தீனியத்திற்கு ஆதரவான தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்தது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை இத்தீர்மானம் நிராகரித்தது. பின்னர் இஸ்ரேல் உடனான அரை மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை திடீரென இந்தியா ரத்து செய்தது.
இவற்றை எல்லாம் இஸ்ரேல் கவனிக்காமல் இல்லை. இஸ்ரேல் பிரதமரின் பயணத்தை சில உள்ளூர் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இரு நாடுகளின் ஒரு ஆழ்ந்த உறவு என்பது உண்மையில் நெருக்கத்தை விட வேறு ஒன்றும் இல்லை என சிலர் கூறுகின்றனர். அந்த நெருக்கம் மறைந்து வருகின்றது. ''பெஞ்சமின் நெதன்யாகு இந்த நெருக்கத்தை புத்துயிர் பெற வைக்க வேண்டும்'' என்கிறார் இந்தியா இஸ்ரேல் உறவுகளைக் கவனித்துவரும் வீல்.
5 பில்லியன் டாலர் மதிப்புடன் இருதரப்பு வர்த்தகம் அதன் முழுத் திறனுக்கு நெருக்கமாக உள்ளது. உண்மையில், 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளது.
இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களுக்கிடையில் வேறுபாடுகளை இஸ்ரேல்-இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் அனந்த் பெர்ன்ஸ்டைன் சுட்டிக்காட்டுகிறார். ''இஸ்ரேலிய வர்த்தகர்கள் அமெரிக்க வர்த்தகர்களுடனே பணிபுரிகின்றனர். அவர்கள் அவசரமாக எப்போதும் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் விஷயங்கள் வித்தியாசமாக உள்ளன. அவர்கள் இந்தியாவில் வியாபார சூழலை புரிந்து கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.
2018-ம் ஆண்டு இரு நாடு வர்த்தகத்தில் ஏற்றங்கள் இருக்கும் என அனந்த் நம்புகிறார்.
தகவல் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. குறைந்த விலையில் தரத்தை விரும்பும் இந்திய சந்தையை பற்றி இஸ்ரேலிய வர்த்தக சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா இஸ்ரேல் உறவுக்கு ஆழமான கொள்கை ஏற்படுத்த வேண்டியது பெஞ்சமின் நெதன்யாகு முன்புள்ள உண்மையான சவால். இரு நாடுகளும் நெருக்கத்துடன் எதிர்காக உறவுகளை மேம்படுத்தவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்