You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவு பற்றாக்குறை: வட கொரிய மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்?
உலக நாடுகளின் தடையால் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தொடர் ஏவுகணை மற்றும் அணு சோதனையின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு விதித்துள்ள பல தடைகளை வட கொரியா எதிர்கொண்டுள்ளது.
வட கொரியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளால், வட கொரிய மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க வட கொரிய மக்கள் புதிய உணவு வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
வட கொரியாவில், கடந்த பல ஆண்டுகளாக உணவு பற்றாக்குறையாக இருப்பது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. அதனால் தான் இங்குள்ள மக்கள் வெவ்வேறு விதமாகச் சமையல் முறைகளைக் கண்டுபிடித்தனர்.
வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்குத் தப்பித்து வந்தவர்கள், உணவு பற்றாக்குறை நேரத்தில் வட கொரிய மக்கள் தயாரிக்கும் உணவைச் செய்து காண்பித்தனர்.
இதன் பெயர் ஸ்பீட் கேக். இந்த சிற்றுண்டியை சமைக்கத் தேவையில்லை. சில நிமிடங்களில் செய்யலாம். சோளத்தில் இருந்து செய்யப்படும் இந்த உணவு அரிசியை விட விலை குறைவானது.
மனிதன் தயாரித்த கறி என கூறப்படும் இந்த உணவு, சோயா எண்ணெய் உற்பத்தியின் போது கிடைக்கும் சக்கையில் இருந்து செய்யப்படுகிறது. இந்த சக்கையினை வழக்கமாகப் பன்றிகளுக்கு உணவாகப் போடுவார்கள்.
சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃப்புக்கள் முக்கோண வடிவில் மடிக்கப்பட்டு, அரிசி மற்றும் மிளகாய் சார்ஸால் நிரப்பட்டிருக்கும்.
மாவு, ஈஸ்ட், சர்க்கரை மற்றும் திராட்சை குளுக்கோஸினால் தயாரிக்கப்படும் இந்த பிஸ்கட் செய்யப்படுகிறது. சக்கரை பற்றாக்குறையாக இருந்தால், பழங்களில் இருந்து குளுக்கோஸ் தயாரிப்பார்கள்.
பன்றி ரத்தத்துடன் காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்றவை கலந்து இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.
வறுத்த சோயா பீன்ஸ் சர்க்கரை பூசப்பட்டிருக்கும் இந்த சிற்றுண்டி பார்க்க பாப்கான் போல இருக்கும்.
சக்கரை மற்றும் வினிகரில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. வட கொரியாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் போது இந்த உணவு விநியோகிக்கப்படும்.
பிற செய்திகள்:
- தென் ஆஃப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி
- திமிறும் திமில்: பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!
- அதிபர் டிரம்பின் உடல்நலம் எப்படி உள்ளது? வெள்ளை மாளிகை விளக்கம்
- மெரினா `எழுச்சி’: இளைஞர் கூட்டம் தானாக வந்தது எப்படி?
- பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் பேசும் உணர்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்