அமெரிக்காவுக்கு அளித்த ராணுவ ஒத்துழைப்பை பாகிஸ்தான் நிறுத்துகிறதா?

அமைச்சர்

பட மூலாதாரம், TWITTER

அமெரிக்காவிற்கு அளித்து வந்த புலனாய்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத குழுக்களை சமாளிக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாகக் கூறி அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகளை முழுவதுமாக அமெரிக்கா நிறுத்துயதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ரம் குர்ராம் டஸ்கிர் கான் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதில் தன் முழு கடமையை பாகிஸ்தான் ஆற்றியுள்ளதாக குறிப்பிட்ட குர்ரம், அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானை அச்சுறுத்துவதை தவிர்த்து, தங்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா புதுப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்த காரணத்தினால்தான அல் -கய்தா அமைப்பு நீக்கப்பட்டதாகவும் குர்ரம் தெரிவித்தார்.

முன்னதாக, ஆஃப்கான் தாலிபான் மற்றும் ஹக்குவனி குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை அந்நாடு மீது விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்: