ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றம்

பட மூலாதாரம், Getty Images
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் அருகில் இருக்கும் போராளிகள் வசம் உள்ள புறநகர் பகுதியில் இருந்து உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வெளியேற்றும் பணியை தொடங்கியுள்ளதாகச் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

செளதி தாக்குதல்: ஏமனில் 13 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
ஏமனில் சொளதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அமைச்சருக்கு சிறை
2012-ம் ஆண்டு ஐ.நாவின் அமைதிப்படையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 18 பேரைக் கொன்ற குற்றத்திற்காக ஐவரி கோஸ்ட் நாட்டைத் தேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹூபர்ட் ஒலேயேவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெரு: கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் விடுதலை

பட மூலாதாரம், REUTERS
பெரு நாட்டின் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான புர்கா லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. 2014-ம் ஆண்டு வரை இவர்தான் பெரு நாட்டின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். போட்டிகளுக்கு மார்க்கெட்டிங் மற்றும் ஊடக உரிமைகளை விநியோகித்தல் தொடர்பாக இவர் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












