நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
தமிழ் ஊடகங்களில் குஜராத், இமாச்சல பிரதேசம் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தியும், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த செய்தியும், ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் குறித்த செய்தியும் பிரதான இடம் பிடித்துள்ளன.
தி இந்து தமிழ்:
தமிழக ஆளுநர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார். ஆய்வுக் கூட்டங்களுக்கு ஆளுநர் அழைத்தால் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்திய செய்தி பிரதான இடம்பிடித்துள்ளது. மேலும், ஆர்.கே நகர் தேர்தலை தள்ளிவைக்க பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியதும், ஆர்.கே நகர் தொகுதியில் தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சராமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
தினமணி:
குற்றப் பின்னணி கொண்ட எம்.பி,க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது தொடர்பான தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.
தினத் தந்தி:
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தொலைத்தொடர்பு வசதி, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற அனைத்து வசதிகளும் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு, பிரதான இடத்தை பிடித்துள்ளது. அதுபோல, 'ஒகி' புயலால் பாதிக்கப்ட்ட பகுதிகளை நாளை பிரதமர் மோடி பார்வையிட இருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்:

பட மூலாதாரம், Dinamalar
தி இந்து (ஆங்கிலம்):
ஆர்.கே நகர் நகர் தொகுதியில் சனிக்கிழமை மட்டும் 15 வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் 25 லட்சம் பணம் பிடிப்பட்டுள்ளது என 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே போல, 'ஒகி' புயலால் சேதமான கன்னியாகுமரியின் உள்கட்டமைப்பை மீட்டுருவாக்க தமிழக அரசு மத்திய அரசிடம் நீதி கோர இருக்கும் செய்தி பிரதான இடத்தை பிடித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஆங்கிலம்):
முறைகேடாக இரண்டு சாதி சான்றிதழை பெற்று 22,000 பேர் தமிழகத்தில் வேலை பெற்று இருப்பதாக வருவாய் துறையின் தரவுகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












