வெனிசுவேலா: 2018 அதிபர் தேர்தலில் போட்டியிட முக்கிய எதிர்கட்சிகளுக்கு தடை

பட மூலாதாரம், Getty Images
வெனிசுவேலாவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மேயர் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் கூறினார்.
தேர்தல் அமைப்பு ஒரு சார்பாக உள்ளது என கூறி ஜஸ்டிஸ் பஸ்ட், பாப்புலர் வில், டெமாக்ரடிக் ஆக்ஷன் போன்ற கட்சிகளின் தலைவர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
வெனிசுவேலாவின் நிர்வாகம் முற்றிலும் நம்பகமான ஒன்று என அதிபர் மதுரோ உறுதியாகக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ''அரசியல் வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது'' என ஞாயிற்றுக்கிழமையன்று ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
''இன்றைய தேர்தலில்(மேயர் தேர்தல்) பங்குபெறாமல் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்த கட்சிகள், இனி போட்டியிடவே முடியாது'' என அதிபர் மதுரோ கூறினார்.
300க்கும் மேற்பட்ட நகரங்கள், சிறு நகரங்களுக்கு மேயரை தேர்தேடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் அக்டோபர் மாதம் அறிவித்தன.
சர்வாதிகாரி என அவர்கள் அழைக்கும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்குதான் இந்தத் தேர்தல் பயனளிக்கும் என அவர்கள் கூறினர்.
மோசமான பொருளாதார நெருக்கடி, அதிகரித்த பணவீக்கம், அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும், அதிபர் மதுரோவின் ஆளும் சோசலிஸ்ட் கட்சி மேயர் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












