ஐ.எஸ்.க்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இராக் அறிவிப்பு
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினருக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இராக் அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் இராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் மாதத்தில், ராவா நகரை இழந்ததை தொடர்ந்து எல்லைப் பகுதியின் சில பகுதிகளே இஸ்லாமிய அரசு குழுவினரிடம் இருந்தன.
இராக்கிற்கு அருகிலுள்ள சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவினரை தோல்வியடைய செய்யும் நடவடிக்கையை முடித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த 2 நாட்களுக்கு பின்னர் இராக்கின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
தங்களை கலிபேட் (மத ரீதியில் ஆட்சி புரியும் வாரிசாக) என பிரகடனம் செய்து, ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த இந்த ஜிகாதி குழுவானது, 2014ம் ஆண்டு சிரியாவிலும், இராக்கிலும் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இந்த குழு, கடந்த ஜூலை மாதம் இராக்கின் 2வது நகரான மொசூலையும், அதனுடைய நடைமுறை தலைநகராமாக விளங்கிய சிரியாவின் வட பகுதியில் இருக்கும் ரக்காவையும் இழந்தது.
சில இஸ்லாமிய அரசு ஆயுதப்படையினர் சிரியாவின் நாட்டுப்புறங்களுக்கு பிரிந்து சென்றுவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. பிறர் துருக்கி எல்லையை கடந்து தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.
இராக்கில் பிரபலமாகி வரும் "பைக்கர்ஸ் குழு"
பிற செய்திகள்:
- இந்தியா: பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்
- தீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ் தளங்களில் பதிலடி
- ராஜஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட முஸ்லிம் நபர் செய்த தவறு என்ன?
- ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம்
- இந்துக் கோவில்களை இடிக்கச் சொன்னாரா திருமாவளவன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













