பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஃப்கானிஸ்தான் அதிபர்

பட மூலாதாரம், Getty Images
ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக, ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் தொடர்புள்ளது என்று கூறப்பட்ட கருத்திற்கு பதிலளித்த அதிபர், இவ்வாறு கூறுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும் அல்லது பெண்களின் தலையில் அணியும் துணியைதான் அணிய வேண்டும் என கூறினார்.
இந்த கருத்து பாலின ரீதியிலானது என சர்ச்சையை கிளப்பியது.
இந்த கருத்தால் வருத்தமடைந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர், தனது வார்த்தைகள் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், `அதிபர் பெண் உரிமைக்காக குரல்கொடுப்பதோடு, நம் நாட்டில் பெண்களுக்கான இடத்தை பாதுகாக்கவும், உறுதியாக்கவும் பணியாற்றி வருபவர்` என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர், `சாடர்` என்று பயன்படுத்திய வார்த்தைக்கு, ஆங்கிலத்தில் தலையில் அணியும் துணி என பொருள்படுவது தான் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சாதாரணமாக கூறப்பட்டவையே தவிர, நாட்டின் மிகமுக்கிய இடத்தில் உள்ள மகளிரை புண்படுத்துவதற்கு கூறயவையல்ல` என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஃபிரி உமன் ரைட்டர்ஸ் என்ற குழு, அதிபரின் வார்த்தைகளுக்கு பதிலளித்துள்ளது.
`பெண்களை அவமானமாக அதிபரே நினைக்கும்போது, ஆஃப்கானிஸ்தான் பெண்களின் நம்பிக்கையாக யாரை பார்க்கமுடியும்` என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பெண் பாராளுமன்ற உறுப்பினரான ஃபௌசியா கூஃபி, ` தலையில் துணையை அணிவதில் பெருமைகொள்வதாக` டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












