இவான்கா டிரம்ப் பங்கேற்கும் ஹைதராபாத் மாநாடு : 8 சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், @GES2017
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இம்மாநாடு குறித்த 8 சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
- பெண்கள் முன்னுரிமை மற்றும் அனைவருக்கும் செழிப்பான வளம் வளர வேண்டும் என்ற நோக்கத்தை மையப்படுத்தி இந்தாண்டிற்கான சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இருக்கும் என்று இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
- இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 1,500 தொழில் முனைவோர் பங்குபெற உள்ளனர்.

பட மூலாதாரம், @GES2017
- இதுவரை நடைபெற்ற மாநாட்டிலேயே தற்போதுதான் முதன்முறையாக இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் தொழில் முனைவோரில் 52.5 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பவர்களில் சுமார் 31.5 சதவீதம் பேர், 30 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள்.

பட மூலாதாரம், @GES2017
- மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளில் 10ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரநிதிகள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த மாநாட்டில் பங்குபெற்ற பிரநிதிகளிலே மிக குறைந்து வயதுடையவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ’ஆப் டெவலப்பர்’ ஹாமிஷ் ஃபின்லேசன். அவருக்கு 13 வயது.

பட மூலாதாரம், @GES2017
- சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு கடந்தாண்டு அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் நடைபெற்ற நிலையில், தெற்காசியாவில் முதல்முறையாக இந்தியாவில் இம்முறை நடைபெறுகிறது.
- பிரதமர் மோதி மற்றும் இவான்கா டிரம்ப் பங்கேற்கும் நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வீடியோ கான்ஃபிரென்ஸ் மூலம் உரையாற்றவுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








