ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?

பட மூலாதாரம், Reuters
செளதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு செளதி அரேபியாவிடம் லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கேட்டுள்ளார்.

இராக்கில் ஐ.எஸ் புதைகுழி

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
கடந்த மாதம் வரை ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த இராக்கின் ஹவிஜா நகரத்தின் அருகில், குறைந்தது 400 சலடங்களை கொண்ட ஒரு புதைகுழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிறிய விமானத்தால் தடைப்பட்ட ராக்கெட்

பட மூலாதாரம், @NASA/TWITTER
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு பெயரிடப்படாத சரக்கு ராக்கெட் கிளம்பத் தயாரானபோது, தடைசெய்யப்பட்ட விமான பாதையில் ஒரு சிறிய விமானம் பறந்ததால் ராக்கெட் ஏவுதல் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

பார்சிலோனாவில் பிரம்மாண்ட பேரணி

பட மூலாதாரம், AFP
கேட்டலோனியா தலைவர்கள் ஸ்பெயின் மத்திய அரசால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கேட்டலோனியா தலைநகர் பார்சிலோனாவில் பேரணியில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












