செளதி நடவடிக்கையால் ஏமனில் பேரழிவு நிலையை எதிர்கொண்டுள்ள லட்சக்கணக்கான உயிர்கள்

போரினால் சின்னாபின்னமாகியுள்ள ஏமன் நாட்டிற்கு செல்லும் அனைத்து பாதைகளையும் செளதி தலைமையிலான கூட்டணி அடைத்துள்ள நிலையில், ஏமனில் மனிதாபிமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உதவி குழுக்கள் உடனடி அனுமதி கோரியுள்ளன.

உயிர் காக்கும் உதவிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உயிர்களின் நிலை பேரழிவு நிலைமையில் இருப்பதாக ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஹூதி போராளிகளுக்கு இரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக கூறி செளதி அரேபியா இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.

மேலும், இரான் எங்களுடன் நேரடிப் போரில் உள்ளது என்று செளதி கூறியுள்ளது.

போராளிகளுக்கு ஆயுதம் விநியோகம் செய்ததாக செளதியின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, செளதி தலைநகர் அருகே பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இடைமறிக்கப்பட்டது.

போராளிகளுக்கு ராக்கெட்டுகளை வழங்குவது போருக்கான நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று செளதியை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை இரானில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திர பிரதிநிதி நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

மேலும், இரான் ஐ.நாவின் இரு தீர்மானங்களை ஒரே நேரத்தில் மீறியுள்ளதாகவும், அதற்கு இரான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :