You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனது நிர்வாணப் படத்தை தானே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பாடகி
தனது நிர்வாணப் புகைப்படங்களை விற்பனை செய்ய முயன்ற புகைப்படக் கலைஞர்களை எதிர்கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே எடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தனக்கு என்னென்ன பிடிக்கும் உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தாமல் தனது வாழ்க்கையை ரகசியமானதாக வைத்திருப்பதற்காக அவர் அறியப்பட்டவர்.
முகமூடி மற்றும் இறகுகளைப் பயன்படுத்தி, பொதுவெளியில் எப்போதும் தனது முகத்தை அவர் மூடிக்கொள்வார்.
பெண் ஒருவரின் பின்புறத்தைக் காட்டும் மங்கலான படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், "என் நிர்வாண புகைப் படத்தை விற்பனை செய்ய யாரோ முயன்றுள்ளார். உங்களை பணத்தை வீணாக்காதீர்கள். இதோ இலவசமாகவே இங்கு அது உள்ளது. கிறிஸ்மசைக் கொண்டாடுங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு நிறுவனத்தின் முத்திரையைக் கொண்டுள்ள அந்தப் படம், அந்தப் பாடகியின் மேலும் 14 படங்கள் இருப்பதாகவும் ஒரு செய்தியைக் கொண்டுள்ளது.
இனிமேல் வெளியாகவுள்ள, அவரது 'எவிரிடே இஸ் கிறிஸ்துமஸ்' எனும் இசைத்தொகுப்பு பற்றி வேண்டுமென்றே குறிப்பிடப்படுவதற்காக கிறிஸ்துமஸ் குறித்து அவர் வேண்டுமென்றே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
டேவிட் குவெட்டா, தி வீக்கென்ட் போன்ற பாடகர் மற்றும் இசைக் குழுக்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்