ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஆயுத விநியோகம்: இரான் மீ்து அமெரிக்கா குற்றச்சாட்டு

கடந்த ஜூலை மாதம் செளதி அரேபியாவுக்குள் ஏவுகணை ஒன்றை ஏமன் போராளிகள் வீசியிருந்த நிலையில், போராளிகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதாக இரானை அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்நாப் சாட் வருவாயில் வீழ்ச்சி

ஸ்நாப் சாட் என்ற பிரபல மெசேஜிங் மொபைல் பயன்பாட்டு செயலியின் உரிமையாளரான ஸ்நாப் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதை காட்டிலும் மோசமாக உள்ளது. அதன் பங்குகள் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் டிரம்ப் உரை

தென்கொரியாவுக்கு பயணப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். அவரது உரை வட கொரியா கொள்கைகளை மையமாக கொண்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் இணையும் சிரியா

பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் சேர தயாராகி கொண்டிருப்பதாக சிரியா தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதன் நிலைப்பாடு காரணமாக தற்போது தனிமைப்படுத்தபட உள்ளது.

சந்தித்திராத மனிதர்களின் முகங்களை ஆடுகளால் அடையாளம் காணமுடியும்

இதுவரை சந்தித்திராத மக்களின் முகங்களை அடையாளம் காண ஆடுகளுக்கு கற்றுத்தர முடியும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :