வாதம் விவாதம்: 'நிச்சயம் அரசியல் இருக்கு... இது அரசியல் நாகரிகம்'

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோதி. இது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் ராஜதந்திரமா? இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவது சரியா என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.

அதற்கு பிபிசி நேயர்கள் பதிவு செய்துள்ள கருத்துகள்.

"இன்றைய நிலையில் அ.திமு.க எனும் ஒரு கட்சி தன்னுடைய தனித்தன்மையை இழந்துள்ள நிலையில், நிச்சயமாக இதனை மரியாதை நிமித்தமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை..... மேலும் இன்றைய சூழலில், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற தி.மு.க வின் உதவியை நாடுவதாக கூட இருக்கலாம்" என வெங்கட் கூறியுள்ளார்.

''மறுபடியும் தொண்டர்கள் ஏமாற்றும் தருணம்..அவர்கள் நினைத்தால் கூடுவார்கள்... நினைத்தால் பிரிவார்கள்...கூடுனாலும்,பிரிந்தாலும் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்கள்.. ஆனால் தொண்டர்கள் தலைவர்கள் ஒவ்வொரு முடிவுக்கும் கோஷம் போடுவது மட்டுமே'' என்கிறார் ராஜ ராஜா.

''அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வருவது சந்தேகமே ,இந்த நிலையில் திமுக தேவை பாஜகவுக்கு தேவையாக இருக்கலாம்'' என ஆறுமுகம் கூறியுள்ளார்.

''அரசியல் உள்நோக்கம் ஒன்றும் இல்லை, அரசியல் நாகரீகம்.'' என சரோஜா கருத்து தெரிவித்திருக்கிறார்.

''நிச்சயம் அரசியல் இருக்கு'' என நரேஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

''அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வருவது சந்தேகமே ,இந்த நிலையில் திமுக பாஜகவுக்கு தேவையாக இருக்கலாம்'' என்கிறார் ஆறுமுகம் பூங்கொடி.

''இது ஒரு நான்கு மாதங்கள் முன்பே உறுதி செய்யப்பட்டது.இது தொடர்ச்சி முடிவு எப்படி இருக்கும் என்று முன்பே முடிவாகி விட்டது'' என்கிறார் மித்ரன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :