You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீர்திருத்தப் புரட்சி: “பிரிவினையை சமாளிக்கும் நம்பிக்கையின் அடையாளம்”
16 ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து சீர்திருத்த சபையினர் (புரோடஸ்டான்டு சபையினர்) பிரிந்த புரட்சியின்போது, நிகழ்ந்த வன்முறைக்கு கத்தோலிக்க மற்றும் லூத்தரன் தலைவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
'சீர்திருத்தம்' என்று அறியப்படும் இந்தப் பிரிவினையால், ஐரோப்பாவில் பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு, போருக்கும், சித்ரவதைக்கும் இட்டுச்சென்றது.
இந்த சீர்திருத்த புரட்சி ஏற்பட்ட 500வது ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், கடந்த காலம் மாற்ற முடியாது என்றாலும், அதனுடைய பாதிப்பை, உலகம் பிரிவினையை சமாளிக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக மாற்ற முடியும் என்று இந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
500 ஆண்டுகளுக்கு முன்னர் சீர்திருத்தம் தொடங்கப்பட்ட ஜெர்மனியின் விட்டன்பர்க் நகரில் சிறப்பு வழிபாடு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
ஜெர்மனி இறையியலாளர் மார்ட்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபை மீது வைத்த மிக கடுமையான விமர்சனங்கள், கிறிஸ்தவத்தின் முழு தோற்றத்தையே படிப்படியாக மாற்றியமைத்தது.
பிற செய்திகள்
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு: தாய்மாமன்கள் குற்றவாளி என தீர்ப்பு
- வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய 'ரோபோ'
- சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?
- பேஸ்புக்: 12.6 கோடி மக்களை ரஷிய பதிவுகள் சென்று சேர்ந்துள்ளது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்