மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்!

பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார்.

புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர்.

கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்கிறார்,

ஐ.நாவின் சமீபத்திய பல தடைகளால், மேக்-அப் பொருட்கள் உட்பட வெளிநாட்டு ஆரம்பர பொருட்களுக்கு வடகொரியவில் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் கொண்ட வடகொரியாவை, அமெரிக்கா 'எப்போதுமே ஏற்காது' என்று, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மார்ட்ஸ் தெரிவித்ததற்கு அடுத்த நாள் இது நடந்துள்ளது.

சியோலில் சனிக்கிழமை பேசிய ஜிம், அத்தகைய ஆயுதங்களை வடகொரியா பயன்படுத்தினால், 'மிகப்பெரிய ராணுவ பதிலடியை' அது சந்திக்கும் என்றார்.

வடகொரியாவின் ஏவுகணை ஏவுதல், அணு ஆயுத சோதனை உள்ளிட்ட செயல்பாடுகள், அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும், வடகொரிய தலைவர் கிம் இடையிலான சொற்போரை அதிகரித்துள்ளது.

எப்போதும், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுடன் காணப்படும் கம்மின் புகைப்படங்களுக்கு மத்தியில், அழகு சாதனங்களுக்கு இடையே நிற்கும் அவரின் புகைப்படம் வித்தியாசத்தை கண்பித்துள்ளது.

வட கொரியா தனது சொந்த மேக்-அப் பெருட்கள் தயாரிக்கும் தொழில்சாலைகளை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. தான் பார்வையிட்ட நிறுவனத்தை புகழ்ந்த கிம், உலக தரத்திற்கான பொருட்களை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :