பாகிஸ்தான் சூஃபி வழிபாட்டிடத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி

பாகிஸ்தானில் ஒரு சூஃபி பிரிவு முஸ்லிம் வழிபாட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது.

பலுசிஸ்தானில் சூஃபி வழிபாட்டிடம் ஒன்றின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும், போலீஸ்காரரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், FIDA HUSSAIN/AFP/Getty Images

படக்குறிப்பு, பலுசிஸ்தானில் சூஃபி வழிபாட்டிடம் ஒன்றின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரும், போலீஸ்காரரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜல் மக்சி மாவட்டத்தில் இச்சம்பவம் வியாழக்கிழமை நடந்தது.

இறந்தவர்களில் ஒருவர், போலீஸ்காரர் என்று நம்பப்படுகிறது. தற்கொலைத் தாக்குதலை நடத்த வழிபாட்டிடத்தல் நுழைய முயன்ற குண்டுதாரி ஒருவரை அவர் தடுக்க முற்பட்டுள்ளார். உடனே அவர் தம் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார்.

சூஃபிப் பிரிவின் மத விழா ஒன்றுக்காக கூடிய மக்களின் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

சமீப காலமாகவே சூஃபி வழிபாட்டிடங்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுகின்றன. அவர்கள் சூஃபித்துவம் மதவிரோதமானது என்று அத் தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.

பிப்ரவரியில் வேறொரு சூஃபி வழிபாட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :