செல்லாத பணத்தை அரைத்துச் செய்த கலைப்படைப்புகள் (புகைப்படத் தொகுப்பு)

அகமதாபாத் நேஷனல் இண்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் (என்.ஐ.டி) மாணவர்களின் கைவண்ணத்தில் செல்லாத ரூபாய் தாள்களும் செல்லும் பொருட்களாக மாறியுள்ளன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.

பர்ஸ்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, கடந்த வாரம் அகமதாபாத் என்.ஐ.டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், கடந்த ஆண்டு இந்திய அரசால் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.
செங்கல்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘ராயல் டச்சு கஸ்டர்ஸ் எஞ்சினியரிங்’ என்ற அமைப்புடன் இணைந்து ‘பணத்தின் மதிப்பு’ என்ற கருப்பொருளில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட கட்டுமானக் கற்கள்.
டைரி

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, 49 கல்வி நிறுவனங்களைக் சேர்ந்த 184 மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றார்கள். இந்திய ரிசர்வ் வங்கி செல்லாது என்று அறிவித்து திரும்பப்பெற்றுக்கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
தட்டு

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, நெதர்லாந்து மாணவர்கள் நால்வர் ‘கஸ்டர்ஸ் எஞ்சினியரிங் பரிசு 2017-ஐ' வென்றார்கள்.
செங்கல்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, செல்லாத ரூபாய்த் தாள்களைக்கொண்டு 22 புதுவிதமான கலைப் பொருட்கள் என்.ஐ.டியில் உருவாக்கப்பட்டன.
டைல்ஸ்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, ஒலி புகா பொருட்கள் (sound proof), பர்ஸ், செங்கற்கள், டைரி போன்ற பல பொருட்கள் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகின.
டைல்ஸ்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, பொதுவாக அரசால் விலக்கப்பட்டு, செல்லாததாக அறிவிக்கப்படும் ரூபாய் தாள்கள் நிலத்தில் புதைக்கப்படும். இந்த பொருட்களை உருவாக்குவதற்காக செல்லாத தாள்களை பலவிதமான முறைகளில் மறுசுழற்சி செய்திருக்கிறார்கள்.
கடிகாரம்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, இந்த புகைப்படத்தில் இருக்கும் கடிகாரம் விலக்கப்பட்ட ரூபாய்த் தாள்களால் உருவாக்கப்பட்டது என்கிறார் என்.ஐ.டி அகமதாபாதின் இயக்குனர் ப்ரத்யுமன் வியாஸ்.
கடிகாரம்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, பயன்படாத ரூபாய் தாள்களைப் பயன்படுத்தி புதுவிதமான பொருட்களை வடிவமைக்க மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்று பிபிசியிடம் சொல்கிறார் ஐ.ஐ.டியின் பொருட்கள் வடிவமைப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் பிரவீண் சிங் சோலங்கி கூறினார்.
உண்டியல்

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, இறந்தகாலத்தில் செல்லாக்காசான ரூபாய் தாள்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த உண்டியல், எதிர்காலத் தேவைகளுக்கான செல்லும் காசுகளை சேர்த்து வைக்கப்பயன்படும்!
நாட்காட்டி

பட மூலாதாரம், Vishal Arora/NID

படக்குறிப்பு, வெற்றி பெற்ற நால்வருக்கும் ஒரு லட்ச ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாய் ‘செல்லும்’ ரூபாய்த் தாள்களில் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.