செளதி அரேபியாவில் பெண்கள் இனி ஃபத்வா வழங்கலாம்!

செளதி அரேபியாவல் இனி ஃபத்வா என்று அறியப்படும் சமயதீர்ப்பை பெண்கள் வழங்கலாம்

பட மூலாதாரம், AFP/ Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில்தான் சௌதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

செளதி அரேபிய அரசுக்கான பிரதான ஆலோசனைக் குழு ஒன்று, ஃபத்வா என்று அறியப்படும் சமய தீர்ப்பை பெண்கள் வழங்குவதற்கு முதல் முறையாக சம்மதம் தெரிவித்துள்ளது.

பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை சில நாட்களுக்கு முன் செளதியில் தளர்த்தப்பட்டது. அது பெண்கள் உரிமையில் மைல் கல்லாக பார்க்கப்படும் இத்தருணத்தில், சுரா சபை என்று அறியப்படும் செளதி அரேபியாவின் பிரதான ஆலோசனைக் குழு பெரும்பான்மை ஆதரவுடன் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறது.

காணொளிக் குறிப்பு, சௌதி பெண்கள்

இஸ்லாமிய சட்டத்தின் மீதான சட்ட ரீதியான கருத்துக்களை வழங்குவதற்கான பெண் முஃப்தி பதவிகளை உண்டாக்குவதற்கு மன்னரின் ஆணை தேவை.

முன்பு, பல ஃபத்வாக்களை செளதியின் ஆண் மதகுருக்கள் வழங்கி இருக்கிறார்கள். இது பெண்களை பாகுபாட்டுடன் நடத்துவதாக சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :