ஸ்காட்லாந்து கடற்கரையில் கண்கவர் வண்ண ஒளிவட்டம் (புகைப்படத் தொகுப்பு)

ஸ்காட்லாந்தின் கிழக்கு கடற்கரையில் தெரியும் வண்ண ஒளிவட்டத்தின் கண்கவர் காட்சி.

பிபிசியின் ஸ்காட்லாந்து செய்தி இணையதள வாசகர்கள், கிழக்கு கடற்கரை, எடின்பர்க் மற்றும் வடக்கு பெர்விக்கில் தோன்றிய 'நார்தன் லைட்ஸ்' என அழைக்கப்படும் வண்ண ஒளி வட்டத்தின் (அரோரா போரியலிஸின்) புகைப்படங்களை அனுப்பிகொண்டிருந்தனர்.

இந்த 'நார்த்தன் லைட்ஸ்' எனப்படும் வண்ண ஒளிவட்டத்தைக் கண்டுகளிக்க ஸ்காட்லாந்து மிகச் சிறந்த இடமாகும். ஆனால், வழக்கமாக வடக்கில் வெகு தொலைவில் காணப்படும்.

மின்னூட்டம் பெற்றத் துகள்கள் தொடர்ச்சியாக சூரியனில் இருந்து வெளியேறுவதை சூரியக் காற்று என்பர். இந்த சூரியக் காற்றில் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் புவியின் காந்தப் புலம் ஆகியவை இணைந்து இந்த நார்த்தன் லைட்ஸை தோற்றுவிக்கின்றன.

இந்த துகள்களில் சிலவற்றை கிரகித்து கொள்ளும் பூமியின் காந்தப்புலம், அவற்றை வளிமண்டலத்திலுள்ள மூலக்கூறுகளோடு மோதவிடுகிறது.

இவ்வாறு தொடர்ந்து மீண்டும் மீண்டும் நடைபெறும் சிறிய உரசல்களால் ஆற்றல் ஒளி வடிவத்தில் வெளியாகிறது.

மேற்கு கடற்கரையில் இருக்கின்ற ஒபான் உள்பட ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளிலும் இந்த வண்ண ஒளிவட்டம் தெரிந்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :