கத்தார் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப்
கத்தாருக்கும், அதற்கு அருகிலுள்ள அரேபிய நாடுகள் சிலவற்றிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Reuters
தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவு வழங்குகிறது என்ற தங்கள் குற்றச்சாட்டின் அடிப்படையில், சௌதி அரேபியாவின் தலைமையிலான கூட்டாளி நாடுகள் கத்தாரோடு இருந்த உறவை கடந்த ஜூன் மாதம் துண்டித்து கொண்டன.
தான் தலையிட்டால், இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருதரப்புகளும் மிக விரைவாக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Alex Wong/Getty Images
குவைத் அரசர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜபார் அல்-சபாவோடு நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண உதவ முடியும் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்த நிகழ்வில் பேசிய குவைத் அரசர் தெரிவித்தார்.
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?
தொடர்புடைய செய்திகள்
- கத்தார் நாடு ஏன் குறிவைக்கப்படுகிறது?
- கத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்
- செளதியின் எச்சரிக்கையை மீறி இரானுடன் உறவை புதுப்பித்தது கத்தார்
- கத்தார் - அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத செளதி தலைமையிலான கூட்டணி
- கத்தார் பிடிவாதம்; எச்சரிக்கும் செளதி கூட்டணி
- அரபு நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கத்தாரின் அமீர்
பிற செய்திகள்
- பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் (சிறப்பு கட்டுரை)
- ஹரியானா சாமியாரின் ஆடம்பரத் தலைமையகத்தின் உள்ளே... (புகைப்படத் தொகுப்பு)
- சென்னை முதல் ஹ்யூஸ்டன் வரை: வெள்ளத்திற்கு யார் பொறுப்பு?
- "கிம் ஜோங்-உன்னின் சொத்துகளை முடக்க வேண்டும்" - அழுத்தம் தரும் அமெரிக்கா
- "இதுதான் அரசின் உண்மையான முகம்": மாணவி வளர்மதி ஆவேசம்
- மஹாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து காணாமல் போன முகலாயர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













