வலையில் சிக்கிய "இரு தலை" குட்டி கடல் பன்றி

பட மூலாதாரம், Empics
படத்தில் காணும் நீர்வாழ் உயிரினத்தை பார்த்தவுடன், புதிதாகப் பிறந்த குட்டி கடல் பன்றி என்று நீங்கள் எண்ணலாம். அவ்வாறு நீங்கள் எண்ணுவதில் தவறில்லைதான்.
ஆனால், ஒரு வேறுபாடு. இந்த உயிரினத்திற்கு முழுமையாக வளர்ந்த இரண்டு தலைகள் உள்ளன.
திமிங்கிலத்திற்கும், டால்ஃபினுக்கும் உயிரியில் வகையில் தொடர்புடைய விலங்காக கடல் பன்றியை குறிப்பிடுகின்றனர்.
கடலோரத்திலும், கடலையொட்டிய நீர்நிலைகளிலும் இந்த உயிரினம் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Henk Tanis
இதற்கு முன்னால், இரண்டு காளை மாடுகள் ஓட்டி பிறந்ததுதான், விலங்கினங்கள் இணைந்து பிறந்த சம்பவமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிறந்த சற்று நேரத்தில், அந்த இரட்டை உடலுடைய காளை மாடு இறந்து விட்டது.
தற்போது, இந்த நீர்நிலை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி ரோட்டர்டாமிலுள்ள இயற்கை வரலாற்று அருட்காட்சியகத்தில் இருந்து சமீபத்தில் வெளியான டெய்ன்ஸ் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கிலுள்ள வடக்கு கடலில், மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் குழு ஒன்று இந்த இரட்டை தலையுடைய கடல் பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.

பட மூலாதாரம், Henk Tanis
இந்த உயிரினத்தை வைத்திருப்பது சட்டவிரோதம் என்று எண்ணிய அந்த மீனவர் குழு, மீண்டும் அதை தண்ணீரில் விட்டுவிட்டார்கள். ஆனால், அதற்கு முன்பாக அதன் புகைப்படத்தை பலரும் எடுத்துள்ளனர்.
விலங்குகளில் கூடுதல் உறுப்புகள் ஒட்டி பிறப்பவை மிகவும் அரிது.
திமிங்கல மற்றும் டால்பின் குடும்பம் முழுவதிலும், இவ்வாறு கூடுதல் உறுப்போடு பிறந்த நிகழ்வு இது 10வது முறையாகும்.

பட மூலாதாரம், Henk Tanis
இருப்பினும், எத்தனை என்ற எண்ணிக்கை தெளிவாக தெரியவில்லை. இவ்வாறான உயிரினங்களின் பிறப்புக்கு முன்னரும், பிறப்புக்கு பின்னரும் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், எண்ணிக்கை தெளிவாக தெரியாமல் போகிறது.
பிற செய்திகள்:
- அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- ஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்
- பால்காரருக்கு உதவு முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!
- வட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை
- இளமையை மீட்டுத் தருமா இளைஞர்களின் ரத்தம்? சர்ச்சையை கிளப்பும் புதிய சிகிச்சை
- உலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா
- கருப்பை புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












