வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ''கோமாளிகள்'' என விமர்சித்த டிரம்பின் ஆலோசகர்

அமெரிக்காவின் சார்லட்ஸ்வீல் நகரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பனன், வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ``கோமாளிகள்`` என விமர்சித்துள்ளார்.

ஸ்டீவ் பனன், "ப்ரீய்ட்பார்ட் செய்திகள்" என்ற வலதுசாரி ஊடகத்துக்கு தலைமை தாங்கியவர். தேசியவாதம் பேசும் முக்கிய நபராகக் கருதப்படும் பனன், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற உதவியாக இருந்தார்.

அமெரிக்க அதிபருடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஸ்டீவ் பனன், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகுவது தொடர்பான முக்கிய முடிவினை எடுக்க அதிபரை வலியுறுத்திய முக்கிய நபராகப் பார்க்கப்படுகிறார்.

வர்ஜீனியாவின் சார்லட்ஸ்வீல் நகரில் நடந்த தீவிர வலதுசாரி குழு மற்றும் இனவாத எதிர்ப்பு குழு ஆகியவற்றுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக, இரு தரப்பினரையும் குற்றம்சாட்டிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

வெள்ளை இன மேலாதிக்கவாதிகள் குறித்து அமெரிக்க இதழுக்குப் பேட்டியளித்த ஸ்டீவ் பனன்,`` இனவாத தேசியவாதிகள் தோல்வியடைந்தவர்கள். தீவிர கொள்கையுடைய அவர்கள் நசுக்கப்பட வேண்டியவர்கள். ஊடகம்தான் அவர்களை ஊதிப் பெருக்குகிறது. பல கோமாளிகளை கொண்ட குழுவினர்கள் அவர்கள்`` என விமர்சித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :