ஆபாசப்படம்: மொபைலில் சக பயணி பாலியல் திரைப்படம் பார்த்தால் என்ன செய்வது?

பக்கத்தில் பயணிப்பவர் ஆபாசப்படம் பார்த்தால் நாம் என்ன செய்வது?

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான மக்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக மூடிய கதவுகளுக்குள் தான் இது நடக்கும்.

ஆனால், பொது இடத்தில் ஒருவர் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து உங்களுடைய பார்வை என்ன? லண்டன் பேருந்தில் தனக்கு நேர்ந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை பிபிசி செய்தியாளர் சியோபன் விளக்குகிறார்.

porn

பட மூலாதாரம், iStock

பகல் நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக இரவு 7.30 மணியளவில் நான் பேருந்தில் ஏறினேன். கடுமையான குளிருடன் தூறல் விழுந்து கொண்டிருந்ததால் பேருந்தில் இருந்த அனைவரும் கனத்த மேலாடைகளை அணிந்திருந்தனர். பேருந்தினுள் மெல்லிய வெளிச்சம் மட்டும் இருந்தது.

தாழ்தளத்தில் மற்றொரு பயணிக்கு அருகில் இருந்த இருக்கையில் நான் அமர்ந்தேன். மிகவும் களைப்பாக இருந்த நான் அமர்வதற்கு இருக்கை கிடைத்தவுடன் சற்று நிம்மதியாக உணர்ந்தேன்.

பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

பட மூலாதாரம், Scott Barbour

அதனால், என் அருகில் அமர்ந்திருப்பவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அப்போது நான் கவனிக்கவில்லை. போக்குவரத்து நெரிசலின் காரணமாக நான் பயணித்த பேருந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்ததால், என்னுடைய பார்வை அருகில் அமர்ந்திருந்தவரின் தொலைபேசியை நோக்கி சென்றது.

பொதுவாக நான் அடுத்தவர்களின் செய்கைகளில் மூக்கை நுழைப்பவன் அல்ல. ஆனால், பேருந்தில் இருந்த மெல்லிய வெளிச்சத்தின் காரணமாக அந்த நபரின் தொலைபேசி வெளிச்சம் என்னை கவர்ந்தது.

அவருடைய தொலைபேசியை பார்க்க வேண்டும் என்பது என் விருப்பமில்லை என்றாலும், ஒரு சில முறை தொலைபேசியின் திரையை பார்த்த பின்பு தான் அங்கு என்ன நடந்த கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. ஆம், என் அருகில் இருந்த நபர் பேருந்தில் அமர்ந்து கொண்டு ஆபாச படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை நான் தெரிந்து கொண்ட பின்னரும் என்னுடைய கண்கள் மீண்டும் மீண்டும் திரையை நோக்கியே சென்று கொண்டிருந்தது.

நான் அதை நம்பவில்லை. அவர் முதலில் அனிமேசன் கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டிருந்த ஆபாச படத்தை பார்த்தார். அதன் அசைவுகளை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் மஞ்சள் நிறத்தில் சிறிய ரக மேலாடை அணிந்த ஒரு பெண் கதாபாத்திரத்தைக் கொண்ட வேறொரு ஆபாச படத்தை காண தொடங்கினார்.

PORN

பட மூலாதாரம், Alamy

அந்த நபர் தொப்பியுடன் கூடிய மேலாடை அணிந்திருந்ததால், அவரின் தொலைபேசியில் குவிந்திருந்த என்னுடைய பார்வையை அவரால் கவனிக்க முடியவில்லை. பேருந்தில் இருந்த மற்றவர்களால் அதை பார்க்க முடியாது என்றாலும், அருகில் அமர்ந்திருந்த என்னை அவர் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.

இறுதியாக அந்த நபர் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு பேருந்து வந்துவிட்டதும், அவர் இறங்குவதற்கு தயாரானார். அவர் இறங்குவதற்கு வழிவிட்டதற்காக நன்றி கூறிக்கொண்டே என்னைக் கடந்து சென்றுவிட்டார். அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கி தெருவில் நடக்கும் வரை அந்த நபரையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சங்கடமாகவும் எரிச்சலாகவும் உணர்ந்தாலும், நான் எதுவும் செய்யவில்லை. அந்த நபரிடமும் நான் பேசவில்லை, பேருந்தின் ஓட்டுனரிடம் புகாரளிக்க வேண்டுமென்றும் எனக்கு தோன்றவில்லை.

புகாரளிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தாலும் ஓட்டுனரை அணுக இயலாத அளவிற்கு பேருந்தில் கூட்டம் நிறைந்திருந்தது. என்னுடைய கண்களைக் கூட அந்த நபர் பார்க்கவில்லை என்பதால், என்னுடைய உணர்வுகளைக் கூட அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை.

ஆனால், பேருந்தில் இருந்து நான் இறங்கிய போது, பல்வேறு கேள்விகள் என்னுடைய மனதில் எழுந்தது.

ஒரு குழந்தை இதை பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? பொது இடத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து சட்டம் ஏதேனும் சொல்கிறதா? அவ்வாறு ஏதேனும் சட்டம் இருந்தால் அதை எளிதாக செயல்படுத்த முடியுமா? ஆபாச படம் பார்ப்பதற்கு பொதுப் போக்குவரத்தான பேருந்து ஒரு சரியான இடம் என்று, ஏன் அந்த பயணி நினைத்தார்? இதை எதிர்த்து கேள்வியெழுப்பினால், குறிப்பிட்ட நபரால் எனக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமா அல்லது எனக்கு பாதுகாப்பு உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகள் தோன்றியது.

ஒரு ஊடவியலாளராக, அந்த நபருடைய கோணத்தில் இருந்து பார்த்தாலும், என்னால் அவரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த இடத்தில் இருந்தாலும், அவருடைய தனிப்பட்ட சாதனமான கைபேசியில் ஆபாச படம் பார்ப்பது தனி மனித உரிமையில் அடங்கியிருக்கிறதா? சமூகத்தின் தனி மனித உரிமைகள் அதற்கான சுதந்திரத்தை அவருக்கு கொடுத்துள்ளதா?

ஆனால், மனதளவில் நான் காயமடைந்துள்ளேன்.

பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

பட மூலாதாரம், BAY ISMOYO

இதை என்னுடைய நண்பர்களிடம் தெரிவித்த போது, அவர்களும் இதே சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

"சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் என்னுடைய மகனுடன் நான் தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில் இப்படிப்பட்ட சூழ்நிலையை நான் எதிர்கொண்டேன்" என்கிறார் ஒருவர். "எனக்கு அருகில் அமர்ந்திருந்த இத்தாலியை சேர்ந்த இரண்டு நபர்கள் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது, நான் அதை எதிர்த்து குரல் எழுப்பினேன். எனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைத்தேன். அது வேலை செய்தது. பின்னர் அவர்கள் தங்களது லேப்டாப்பை மூடினர்" என்றும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இதில் சட்டத்தின் பங்கு என்ன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

ஆபாச படங்கள் மீதான சட்டங்கள் குறித்து நிபுணத்துவம் கொண்டுள்ள டுர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்ளாரே மெக்ளின் இது குறித்து தெரிவிக்கையில், பொதுப் போக்குவரத்து, நூலகம், பூங்கா மற்றும் உணவகம் போன்ற பொது இடங்களில் ஒருவர் ஆபாச படம் பார்ப்பதை ஒரளவிற்கு தான் தடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

"ஒரு புத்தகத்தை படிப்பது போன்றது தான் அது" என்று குறிப்பிட்டுள்ள அவர் "பொது வெளியில் எளிதாக கிடைக்கக்கூடிய சட்டம் அனுமதித்துள்ள ஒன்றைத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் க்ளாரே மெக்ளினின் பார்வையின்படி, பொது இடத்தில் ஆபாச படம் பார்க்கும் நபர் மற்றவர்களை தொந்தரவு செய்தாலோ அல்லது துன்புறுத்தினால் மட்டும்தான் சட்டத்தால் தடுக்க முடியும்.

ஆனால், லண்டன் போக்குவரத்துத் துறையை நான் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இந்த சம்பவத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தோன்றியது.

PORN

பட மூலாதாரம், Thinkstock

"ஆபாச படங்கள் பார்ப்பது போன்ற உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயலை யார் செய்தாலும், காவல்துறைக்கோ அல்லது துறை சார்ந்த அலுவலரிடமோ தகவல் கூறுங்கள்" என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

மற்றொரு புறம் பிபிசியை தொடர்பு கொண்ட லண்டன் வழக்கறிஞர் ஜேம்ஸ் டர்னர், அநாகரிகமான முறையில் காட்சிப்படுத்துதல் தடுப்பு சட்டம் (Indecent Displays (Control) Act) என்ற ஒரு சட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது போன்று பொது வெளியில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்வது எந்த அளவிற்கு சாத்தியமானது என்பது கேள்விக்குறிதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: