வெள்ளை இன மாணவர்கள் சிறுபான்மையினராகும் அமெரிக்க பல்கலைக்கழகம்

ஹார்வர்டில் வெள்ளை இன மாணவர்கள் சிறுபான்மையினர் ஆகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

அமெரிக்காவின் கெளரவம் மிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அதன் வரலாற்றில் முதல் முறையாக, வரும் கல்வியாண்டில் வெள்ளை இன மாணவர்கள் அங்கு சிறுபான்மையினராக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்தப் பல்கலைக்கழகம், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் பாதிக்கும் சற்று மேலானோர் சிறுபான்மை இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. அவர்களில் ஆசிய-அமெரிக்கர்கள் 22 சதவிகிதமும், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் 15 சதவிகிதத்தை விட சற்றே குறைவாகவும் உள்ளனர்.

வேறு எந்த ஒரு பல்கலைக்கழகத்தையும்விட, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களே, அதிக எண்ணிக்கையில் அமெரிக்க அதிபர்களாகியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :