உலகத்தில் கொண்டாடப்படும் சிறந்த பயணப் புகைப்படங்கள்

பட மூலாதாரம், GMB Akash / TPOTY
டிக்கெட் வாங்காததால், பங்களாதேஷில் ஒரு விரைவு ரயிலின் பெட்டி இணைப்பு பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பெண்.
2009-ம் ஆண்டு சிறந்த பயணப் புகைப்பட கலைஞர் விருது பெற்ற ஜிஎம்பி ஆகாஷ் இப்புகைப்படத்தினை எடுத்துள்ளார்
சமீபத்திய புகைப்படப் போட்டியில் வெற்றி படங்கள், கடந்த 14 ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் சிறந்த படங்களாக நடுவர்கள் தேர்ந்தெடுத்த படங்களின் வண்ணத் தொகுப்பில் சில:

2003, ஹோய் அன், வியட்நாம்
புகைப்படக் கலைஞர்: மைக்கேல் மாட்லாக், அமெரிக்கா

பட மூலாதாரம், Michael Matlach / TPOTY
நடுவர்களின் கருத்து: ``பரபரப்பான `ஹோய் அன்` காலைச் சந்தையின் நிறங்களையும், மக்களின் நடமாட்டத்தையும் மைக்கேல் மாட்லாக்கின் கேமரா அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறது. ஒரே புகைப்படத்தில் சந்தையின் முக்கிய அம்சங்களைக் காட்டிருக்கிறார்``

2004, கோலென்ஸ், மாலி
ரெமி பெனாலி, பிரான்ஸ்

பட மூலாதாரம், Remi Benali / TPOTY
கோடைக் காலத்தின் போது வீசிய குளிர்ந்த காற்றை ஒரு சிறுவன் கொண்டாட்டத்துடன் அனுபவிக்கிறான்.

2005, ஹவானா, கியூபா
புகைப்பட கலைஞர்: லார்னே ரெஸ்னிக், கனடா

பட மூலாதாரம், Lorne Resnick / TPOTY
``அடுக்குமாடி குடியிருப்பின் முற்றத்தில் நான் நுழைந்தபோது, ஒரு பெண் இரண்டு முட்டைகளை மற்றொரு பெண்ணுக்குக் கொடுக்கும் ஜன்னல் வழி வணிகத்தைப் பார்த்தேன்``என்கிறார் லார்னே ரெஸ்னிக்.

2005, நெதர்லாந்து
புகைப்பட கலைஞர்: ஜெரார்ட் கிங்மா, நெதர்லாந்து

பட மூலாதாரம், Gerard Kingma / TPOTY
நடுவர்களின் கருத்து:``சிறிய ஆட்டுக் குடும்பத்தின் தற்செயலான தருணத்தை புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். ``சுதந்திரத்தின் கணம்`` என்ற தலைப்பிற்கு ஏற்ற சிறந்த புகைப்படத்தினை எடுத்துள்ளார் ஜெரார்ட்``

2005, ஜலிஸ்கோ, மெக்சிகோ
புகைப்பட கலைஞர்: டாட் விண்டர்ஸ், அமெரிக்கா

பட மூலாதாரம், Todd Winters / TPOTY
மெக்ஸிக்கோவின் டெபாடிலன் நகரில், ஒரு தொப்பி விற்பனையாளர், சாலையோரத்தில் தொப்பிகளை வரிசையாகக் காட்சிக்கு வைத்துள்ளார். அந்த விற்பனையாளர் தூங்குகிறாரா? இந்த வரிசையின் இடது புறத்தில் ஒரு தொப்பி இல்லாத நிலையில், அத்தொப்பியைதான் அவர் அணிந்திருக்கிறாரா? அல்லது அது விற்பனையாகிவிட்டதா? என இந்த சாதாரண புகைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

2009, மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
புகைப்பட கலைஞர்: போராஸ் சௌத்ரி

பட மூலாதாரம், Poras Chaudhary / TPOTY
ஹோலி திருவிழா: குளிர்காலத்தின் முடிவு மற்றும் வசந்தகால வருகை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு கொண்டாட்டமான இந்து பண்டிகை.

2011, கனடிய ஆர்க்டிக்
புகைப்பட கலைஞர்: தாமஸ் கோக்டா, ஜெர்மனி

பட மூலாதாரம், Thomas Kokta / TPOTY
``இந்த அற்புதமான நிகழ்வைப் படம் பிடிக்க நான் மூன்று வாரங்களாக கனடிய ஆர்க்டிக் பகுதியில் தங்கியிருந்தேன். மைனஸ் 40 முதல் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் அளவு உரைய வைக்கும் குளிரில் அந்த இரவுகளை நான் கழித்தேன்`` என்கிறார் தாமஸ் கோக்டா

2011, வெள்ளை கடல், கரேலியா பிராந்தியம், வடக்கு ரஷ்யா
புகைப்பட கலைஞர்: பிரான்கோ பான்ஃபி, சுவிட்சர்லாந்து

பட மூலாதாரம், Franco Banfi / TPOTY
``பெலூகா திமிங்கலம் எனது அருகில் வந்து என்னைத் தொடும் தூரத்தில் இருந்து திரும்பி சென்றது. அதேபோல் பல முறை என்னிடம் விளையாட்டுக் காட்டி, பிறகு எனக்கு முன்பாக வந்து நின்று, நான் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்புக் கொடுத்தது`` என்கிறார் பிரான்கோ பான்ஃபி.

2012, ஓமோ ஆற்றுப் பள்ளத்தாக்கு, எத்தியோப்பியா
புகைப்பட கலைஞர்: ஜான் ஷெலிஜெல், ஜெர்மனி

பட மூலாதாரம், Jan Schlegel / TPOTY
``கரோ பழங்குடியினரின் மிகவும் மரியாதைக்குரிய வீரர்களில் ஒருவர் பிவா. இவர், மூன்று சிங்கங்களையும், நான்கு யானைகளையும், ஐந்து சிறுத்தைகளையும், பதினைந்து எருமை மாடுகளையும், பல முதலைகளையும் கொன்றுள்ளதாவும், மேலும் அண்டை பழங்குடி மக்கள் உடனான சண்டையில் பல மக்களையும் கொன்றுள்ளதாவும் என்னிடம் பெருமையுடன் கூறினார்`` என்கிறார் ஜான் ஷெலிஜெல்.

2013, ஃபூகெட், தாய்லாந்து
புகைப்பட கலைஞர்: ஜஸ்டின் மோட், அமெரிக்கா

பட மூலாதாரம், Justin Mott / TPOTY
``இந்த புகைப்படம் மக்களைக் குழப்பும். `இந்த பெண் நீச்சலடிக்கும் அதே குளத்தில், யானையும் நீச்சலடித்தால், யானையின் கால்கள் ஏன் தெரியவில்லை` என மக்கள் குழம்புவார்கள். ஆனால் யானை இந்த நீச்சல் குளத்தில் இல்லை. நீச்சல் குளத்திற்கு அப்பால் இருக்கும் நிலத்தில் நிற்கிறது. நீர் புகாத பையில் கேமராவை வைத்து, பாதியளவு கேமராவை நீரிலும், பாதியளவு கேமராவை நீருக்கு வெளியிலும் வைத்து புகைப்படம் எடுத்தேன்`` என்கிறார் ஜஸ்டின் மோட்.

2014, மாரா நதி, வடக்கு செரங்கெட்டி
புகைப்பட கலைஞர்:நிக்கோல் கேம்ப்ரே, பெல்ஜியம்

பட மூலாதாரம், Nicole Cambre / TPOTY
மழையின் காரணமாக கூட்டமான காட்டுமான்கள் எங்கு செல்வது என குழப்பமடைந்து, நதியின் இரு திசைகளிலும் கடந்து சென்றன. தொடர்ந்து சென்று கொண்டிருந்த காட்டுமான்களின் பெரிய கூட்டத்துடன் சிறிய கூட்டம் இணைய முயற்சித்தன. சிறிய கூட்டம் வந்தடைந்த இந்த இடம் செங்குத்தான பகுதியாக இருந்தது. ஒவ்வொன்றாக இறங்கும் வரை காத்திருக்காமல், இந்த ஒரு மான் மட்டும் மற்ற மான்களின் மீது குதித்தது.

2014, கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு
புகைப்பட கலைஞர்: ஜானி ஹக்லண்ட், நார்வே

பட மூலாதாரம், Johnny Haglund / TPOTY
``லீ சபர்ஸ்`` என்ற தனித்துவமான இக்குழுவினர், தங்களைச் சுற்றி வறுமை இருந்த போதிலும் பெரும் மதிப்பிலான டிசைனர் ஆடைகளை அணிந்து வீதிகளில் உலாவுகிறார்கள். இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் செய்வதும் சாதாரண பணிகள்தான்.













