தூணில் மோதிய கேபிள் கார்: அந்தரத்தில் தொங்கிய பயணிகள்

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் கேபிள் கார் ஒன்று அந்த அமைப்பின் ஆதரவு தூணில் மோதியதில் டஜன்கணக்கானோர் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தனர்.
ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேலே தூண் ஒன்றில் மோதி இந்த கேபிள் கார் போக்குவரத்து நின்றுவிட்டது.

பட மூலாதாரம், EPA
இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனை பயன்படுத்தியுள்ளனர். அதில் சிலர் 40 மீட்டர் (130 அடி) உயரத்தில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் மீட்கப்பட்டு கீழே கொண்டுவரப்படுவதை வெளியாகியுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன. காயமுற்றோர் பற்றிய தகவல்கள் இதுவரையில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்துபோது, அங்கிருந்த 32 கேபிள் கார்களும் இயங்கி கொண்டிருந்தன.

பட மூலாதாரம், EPA
இந்த மோதல் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
இந்த கேபிள் கார்களில் ஒன்று ஆதரவு அமைப்பின் ஒரு பகுதியில் மாட்டிக்கொண்ட காரணத்தால், இந்த கேபிள் கார் போக்குவரத்து அமைப்பு முழுவதும் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், EPA
பிற செய்திகள்
- 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை
- பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”
- பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்
- கை கால்களை இழந்தும் சாதிக்கும் கலைஞன் (காணொளி)
- அளவாக மது குடித்தால் நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து குறையுமா?
- பெண்ணின் கழுத்தை சுற்றி, மூக்கை கடித்த மலைப்பாம்பு: மீண்டது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












