ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம்

பட மூலாதாரம், KZTV
ஏடிஎம் எந்திரத்திற்குள் தவறுதலாக மாட்டிக்கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர், பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பிய வினோதம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது
வங்கி ஒன்றின் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய செல்பேசியை காரிலேயே விட்டுச்சென்று, ஏடிஎம் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார்.
புதன்கிழமையன்று கார்புஸ் கிறிஸ்டியில் இந்த மனிதர் சிக்கிக்கொண்ட ஏடிஎம் எந்திரத்தில் தொடர்ந்து பணம் எடுத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம், தன்னை காப்பாற்றுமாறு பெயர் வெளியிடப்படாத இந்த மனிதர் கத்தியிருக்கிறார். இந்த நபரை வெளியே எடுக்க கதவை உடைக்கும் முன்பு வரை இதுவொரு ஏமாற்றுவேலை என்று காவல்துறையினர் எண்ணியுள்ளனர்.

பட மூலாதாரம், KZTV
"அந்த எந்திரத்தில் இருந்து சிறியதொரு சத்தம் வந்ததை எங்களால் கேட்க முடிந்தது. அது நகைச்சுவை என்று எல்லாரும் எண்ணிக்கொண்டிருந்தோம்" என்று காவல்துறை அதிகாரி ரிச்சர்ட் ஓல்டன் தெரிவித்திருக்கிறார்.
இந்த எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபரே எழுதி, ஆட்கள் எடுக்கின்ற பண விவர ரசீது அனுப்பப்படும் பாதை வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட குறிப்பில், "தயவுசெய்து உதவவும். இங்கு நான் சிக்கியுள்ளேன். என்னுடைய தொலைபேசியும் இப்போது என்னிடம் இல்லை. என்னுடைய மேலதிகாரியை அழைக்கவும்" என்று எழுதியிருந்தது. அந்த நபருக்கு வேலை வழங்கியவரின் செல்பேசி எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்க வங்கியின் இந்த ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட 2 மணிநேரத்திற்கு மேலான பின்னர்தான் இந்த நபர் வெளியே மீட்கப்பட்டார்.
"அனைவரும் நன்றாகவே உள்ளனர். ஏடிஎம் எந்திரத்திற்குள் ஒருவர் சிக்கிக்கொள்வதை நீங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியாது. இது பைத்தியகாரத்தனம் போன்று தோன்றியது" என்று அதிகாரி ஓல்டன் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்
- `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'
- டெல்லி: பிரதமர் வீட்டு முன் தமிழக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
- 6 சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்த பெண்ணுக்கு சிறை
- தூக்கத்தில் பற்களை நறுக்குபவரா? என்னென்ன பாதிப்புக்கள் வரும்?
- மனைவி ஷாப்பிங் செய்யும் வரை காத்திருக்க கணவர் மையங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













