You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விபத்து: காரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்த 70 வயது பெண்மணி
அமெரிக்க மாநிலமான கொலாராடோவில் பெண் ஒருவர் தனது காரை நீச்சல் குளத்திற்குள் தவறுதலாக ஓட்டிச் சென்று மூழ்கடித்துள்ளார்..
இதற்கு காரணம் அவர் ப்ரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேடரை அழுத்தியதாக கூறப்படுகிறது.
திங்களன்று காலை கொலாராடோ ஸ்பிரிங்கில் உள்ள ஷையேன் ஓய்வு விடுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாகனம் ஒன்றை இந்த கார் மோதியதாகவும் பின்பு மணிக்கு 97கிமீ வேகத்தில் வேலியை தாண்டி மலையில் பயணித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிபிசியின் பிற செய்திகள்:
அந்த காரை ஓட்டி வந்த 70 வயதுக்கு மேல் இருக்கும் பெண் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டார்.
அவருக்கு தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள நேரும் என 'கெசட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது. மேலும் பெடலில் ஏற்பட்ட தவறே இதற்கு காரணமாக இருக்கலாம் என செய்தித்தாள் மற்று உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடந்த ஓய்வு விடுதியில் தங்கியிருந்த 35 வயதாகும் ஜெசிக்கா புசியோ பிபிசியிடம் நடந்தவற்றை விளக்கினார்
"சுமார் 11.00 மணிக்கு நானும் எனது நண்பர்களும் நீச்சல் குளத்தை நோக்கிச் சென்றபோது கார் ஒன்று நீச்சல் குளத்தில் பாதியளவு மூழ்கியிருந்தது."
"ஆச்சரியமாக அந்த காரில் கீறல்கள் எதுவும் இல்லை; அதன் டயர்கள் மட்டுமே காற்றில்லாமல் காணப்பட்டது. என்னை கேட்டால் நீச்சல் குளம் அந்த விபத்தின் தன்மையை குறைத்துள்ளது என்றும் அந்த பெண்மணி மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் கூறுவேன்." என்றார் ஜெசிக்கா புசியோ
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்