புதிய சாதனையை எட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்; மார்க் சக்கர்பெர்க் பெருமிதம்

பட மூலாதாரம், Getty Images
தனக்கு இப்போது உலக அளவில் அதிகாரபூர்வமாக 2 பில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தன்னுடைய சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை அறிவித்துள்ளார்.
அதன் ஆரம்ப ஆண்டுகளில் நிலையற்ற நிதிநிலையைக் கொண்டிருந்த ஃபேஸ்புக்கின் லாபம் கடந்த காலாண்டில் மட்டும் 3 பிலியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Mark Zuckerberg
இதற்கு பெரும்பாலும் அதிக விளம்பர வருவாய்கள் காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இணைய தீவிரவாதத்தை எதிர்கொள்ள தோல்வியடைந்ததற்கும், கொலைகள் மற்றும் தற்கொலைகள் உள்பட மனதை புண்படுத்தும் பதிவுகளை நீக்குவதற்கு தாமதமாக செயல்படுவதற்கும் ஃபேஸ்புக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இப்பிரச்சனைகளை சமாளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












