பாகிஸ்தானில் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 123 பேர் பலி
பாகிஸ்தானின் பஹவல்பூரில் எண்ணெய் ஏற்றிக் கொண்டுச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட வண்டியிலிருந்து கசிந்த எரிபொருளை எடுக்கச் சென்ற பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன; காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில், தீயணைப்பு விரர்கள் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், JAVED
அதிகப்படியான வேகத்தில் சென்றதால் லாரி கவிழ்ந்து, பின்னர் தீப்பிடித்து எரிந்தது என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், JAVED
விபத்து நடந்த இடத்தில் சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்ததால் லாரியில் நெருப்பு பற்றியிருக்கலாம் என நேரில் கண்டவர்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கள் எழுந்துள்ளன.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













