'விமானத்தில் ஆண்களுக்காக பெண் பயணிகளை இடம்மாற நிர்பந்திக்கக்கூடாது' : இஸ்ரேல் நீதிமன்றம் உத்தரவு

பெண் பயணிகளுக்கு அருகே அமர மறுக்கும் தீவிர யூத பழமைவாத ஆண்களுக்காக, பெண் பயணிகளை இடம் மாறி உட்காருமாறு நிர்பந்தப்படுத்தக்கூடாது என இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று, அந்நாட்டின் விமான நிறுவனமான எல்.அல் -க்கு தடை விதித்துள்ளது.

யூத இனப் படுகொலையிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்தவரான, 83 வயதான ரெனீ ராபினோவிட்ஸ் என்ற பெண்மணி, 2015-ஆம் ஆண்டு எல்.அல் நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்த போது , தீவிரமான யூத பழமைவாதத்தை கடைபிடிக்கும் ஒரு நபருக்காக ,தன்னுடைய உயர் வகுப்பு இருக்கையிலிருந்து வேறு இருக்கைக்கு இடம் மாறிக்கொள்ளுமாறு கேட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் நடவடிக்கையை எதிர்த்து, அவர் இஸ்ரேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ராபினோவிட்ஸ்க்கு ஏற்பட்ட சேதத்திற்காக,அவருக்கு 1800 டாலர்களை நீதிமன்றம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அந்த பாட்டி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்