You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு
லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
.உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, கென்சிங்டனின் வடக்கில் அமைந்துள்ள எரிந்து கொண்டிருக்கும் க்ரென்ஃபெல் டவர் இடிபாடுகளில்வேறு யாரும் உயிரோடு சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று தீயணைப்பு சேவை தெரிவித்திருந்தது.
இன்னும் மக்கள் இருக்கிறார்களா என்பதற்கான சாட்சியங்களை தேடவும், உள்ளே இருப்போரை இனம் காணவும் மோப்ப நாய்கள் அனுப்பப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு தன்னுடைய நினைவுகளும், பிரார்த்தனைகளும் இருப்பதாக எலிசபெத் அரசி தெரிவித்திருக்கிறார்.
காணமல் போன குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றிய தகவல்கள் ஏதாவது கிடைக்குமா என மக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30 பேரில் 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த கட்டடத்தில் தீ பற்றியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளதால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதர் தெரீசா மே, இதுபற்றி முழு புலனாய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்