தவறான எல்லைப்படம் : இந்திய உள்துறை அமைச்சகம் விசாரணை

பாகிஸ்தானுடனான இந்திய எல்லைக்குப் பதிலாக, ஆஃப்ரிக்காவில் உள்ள மொரோக்கோ மற்றும் அங்குள்ள ஸ்பானிய நிலப்பரப்புக்கு இடையேயான படம் தவறுதலாக எப்படி பிரசுரிக்கப்பட்டது என்பது குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் விசாரணை செய்து வருகிறது.

உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில், ஆப்ரிக்காவில் ஸ்பெயினின் பகுதியான, சியூட்டாவுக்கும் மொரோக்காவுக்கும் இடையே உள்ள வேலியிடப்பட்ட எல்லைப்பகுதியைக் காட்டும் ஒரு படம் , இந்திய பாகிஸ்தானிய எல்லைப் பகுதியில் நடந்து வரும் ராட்சத மின் விளக்குகளை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் காட்ட பயன்படுத்தப்பட்டது.

இந்த தவறு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். தவறு ஏதும் நடந்திருந்தால், அமைச்சகம் மன்னிப்புக் கேட்கும் என்று உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷி கூறினார்.

உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையில் வெளியான படத்தை பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் விமசர்னம் செய்துள்ளனர்.

அரசாங்கம் எவ்வாறு தனது வருடாந்திர அறிக்கையில் தவறான படத்தை வெளியிடலாம், இணையத்தில் இருந்து ஒரு படத்தை எடுத்து பிரசுரிப்பது மோசமான செயல் என்று கண்டித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்