தம்பி பிறந்தபோது செவிலித்தாயான 12 வயது சகோதரி
அமெரிக்காவின் மிஸிஸிப்பியில் ஒரு 12 வயது சிறுமி, தனது தாயின் பிரசவத்தில் உதவியதன் மூலம், புதிதாக பிறந்த தனது தம்பியுடன் அரிதான பிணைப்பு அனுபவத்தை பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், NIKKI SMITH
தனது தாயின் பிரசவ வலியின் போது வருத்தமடைந்த ஜேஸி டெலபீனா, தனது தம்பி பிறப்பதற்கு குறுகிய காலமே இருந்ததால்தான் மிகவும் பதற்றமடைந்ததாக தெரிவித்தார்.
அதனால் ஜேஸியையும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆடையை, அணிந்து தனது மேற்பார்வையில் பிரசவத்தில் உதவுமாறு மருத்துவர் கேட்டுக் கொண்டார். தொப்புள் கொடியை வெட்டுவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டார்.
''ஏதாவது தவறு செய்து விடுவேனோ என்று எனக்கு பதற்றமாக இருந்தது. ஆனால், இது என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக இருந்தது'' என்று அமெரிக்க ஊடகங்களிடம் ஜேஸி டெலபீனா தெரிவித்தார்.
''அவன் உயிருடன் பிறப்பதை பார்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதனால், நான் அழ ஆரம்பித்துவிட்டேன்'' என்று டபுள்யூபிடிவி ஊடகத்திடம் ஜேஸி தெரிவித்தார்.
இதனிடையே, எவ்வித ஆபத்துமில்லாமல் 3.3 கிலோ எடையுடன் குழந்தை கேஸன் கேரவே பிறந்துள்ளான்.

பட மூலாதாரம், NIKKI SMITH
குழந்தையின் தாயான டேட் கேரவே, தனது மகளின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகள் தனக்கு கண்ணீர் வரவழைத்ததாக தெரிவித்தார். ''எனக்கு அது சிறப்பான தருணமாக இருந்தது'' என்று அவர் தெரிவித்தார்.
கேரவே குடும்பத்தின் நண்பரான நிக்கி ஸ்மித் சிறுமி ஜேஸியின் நெகிழ்வான அனுபவம் குறித்த புகைப்படங்களை சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் பகிந்துள்ளார். அப்புகைப்படங்கள் 1,70,000 தடவைகள் பகிரப்பட்டன.
தாயின் பிரசவத்தில் பங்கேற்குமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்த மருத்துவரின் முடிவு குறித்து சிலர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர். தாயின் பிரசவத்தில் உதவிய தனது அனுபவத்தை சிறுமி விளக்கிய பின்னரும், அவர் மனத்துயரம் அடைந்திருக்கக்கூடும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ''இந்த அழகான மற்றும் நெகிழ்வான தருணத்தை தாயும், மகளும் என்றும் நினைவில் கொண்டிருப்பர்'' என்று நிக்கி பதிவிட்டுள்ளார்.
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












