புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிப்படைந்து, இன்னும் சில மாதங்களே தான் வாழமுடியும் என்று மருத்துவர்களால் கூறப்பட்ட, இயன் டூட்ஹில் ஏவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார்.

உலகின் அதிஉயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் புற்றுநோயாளி தானாகத்தான் இருக்கும் என்று நம்புவதாக இயன் கூறுகிறார்.

ஷெஃபீல்ட் வெட்னெஸ்டே கால்பந்து அணியின் ரசிகரான இயன் டூத்ஹில், ஒரு அறக்கட்டளைக்கு உதவுவதற்காக, போட்டி அணியான ஷெஃபீல்ட் யுனைடட் அணியின் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்ற ஒப்புக்கொண்டார்.

47 வயதான இயன் டூத்ஹில் திங்கட்கிழமையன்று எவரெஸ்ட் சிகரத்தை தொட்டார்.

மக்மிலன் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நன்கொடை வசூலிக்கும் முயற்சியில் இந்த சாதனையை தொடங்கிய அவர், இதுவரை 40,600 டாலர் நன்கொடையை பெற்றுத்தந்துள்ளார்.

"இங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை, இந்த சிகரத்தில் இருப்பது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவன், ஷெஃபீல்ட் வெட்னெஸ்டேவின் ரசிகன், ஆனால், SUFC யின் கொடியுடன்."

இங்கிலாந்தின் ஷெஃபீல்டை சேர்ந்த இயன் டூத்ஹில், லண்டனின் வில்ஸ்டென் கிரீனில் வசிப்பவர். இவர் இமயமலையில் ஏறியிருக்கிறார்.

இயன் டூத்ஹில்லுக்கு குடல் புற்றுநோய் இருப்பதாக 2015 ஜூன் மாதம் கண்டறியப்பட்டது, நோயுடன் போராடி அவர் மீண்டு வந்தாலும், தற்காலிகமாக பின்னடைந்த புற்றுநோய் மீண்டும் அவரை தாக்கியது.

"இன்னும் சில மாதங்களே வாழமுடியும்" என்று அவரிடம் சொல்லப்பட்டது.

பிப்ரவரி மாதம் பிபிசியிடம் பேசிய இயன், "எதுவும் சாத்தியமே என்பதை நிரூபிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று சொன்னார்.

'அற்புதமான சாதனை'

வடக்கு கோல் பாதையை மே 16 ஆம் தேதியன்று சென்றடைந்த இயன், ஜூன் 5ம் தேதியன்று எவரெஸ்டை அடைந்தார்.

NJP என்பவரின் டிவிட்டர் செய்தி இது: "என்ன ஒரு அற்புதமான சாதனை இது, இயன் டூத்ஹில்லுக்கு இது ஒரு அற்புதமான கணம். உணர்ச்சிபூர்வமாய் உணர்கிறேன். நீங்கள் சிகரத்தை தொட்ட்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது #cimbingforcancer".

நண்பர் ஒருவர் £1,000 நன்கொடை அளித்த பிறகு, இந்த ஷெஃபீல்ட் வெட்னெஸ்டே ரசிகர், ஷெஃபீல்ட் யுனைடட் அணியின் கொடியை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்றினார்.

ரோதர்ஹாமை சேர்ந்த லெஸ்லி பின்ஸ் என்பவரும் டூத்ஹில்லுடன் சிறிது தூரம் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்தில் உடன் வந்தார். சக மலையேற்ற வீர்ர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய அவர் தனது மலையேற்ற முயற்சியை பாதியிலேயே கைவிட்டார்.

இயன் டூத்ஹில், தனது மலையேற்ற முயற்சியின் மூலம் £29,100 நன்கொடையாக திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தார், ஆனால் வசூலான நன்கொடையோ கிட்டத்தட்ட £31,500.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்