பாரிஸ் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ன?
பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதல் என்பது தொழிற்சாலைகள், விவசாயம் ஆகிய நடவடிக்கைகளால் வாயுக்கள் அல்லது வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுவதால் ஏற்படும் மோசமான பாதிப்புகளைக் குறிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வாயு உமிழ்வு ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் உலகம் வெப்பமடைவதில் காணப்படும் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் பாரிஸ் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட நாடுகள் செய்ய ஒப்புக்கொண்டவை:
புவி வெப்ப நிலையை, தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு நிலவிய 2 செண்டிகிரேடுக்கும் கீழ் வைத்திருப்பது. முடிந்தால் அதற்கும் குறைவாக, அதாவது 1.5 செண்டிகிரேடுக்கு கொண்டுவருவது.
மனித நடவடிக்கைகளால் வெளியிடப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவை , மரங்கள், மண் மற்றும் கடல்கள் இயற்கையாக உறிஞ்சிக்கொள்ளக்கூடிய அளவுக்கு மட்டுப்படுத்துவது.
இதை 2050லிருந்து 2100 ஆண்டு காலகட்டத்தில் எப்போதாவது தொடங்குவது.
ஒவ்வொரு நாடும் வெளியிடும் வாயுக்களின் அளவை எந்த அளவுக்கு கட்டுப்படுத்துகின்றது என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்வது. இதன் மூலம் அந்நாடு வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அதிகரிக்க முடியும்.
வறிய நாடுகள் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும், புதுப்பிக்க்க்கூடிய எரிசக்தியை பயன்படுத்துவதற்கு மாறவும் உதவ அவைகளுக்கு செல்வந்த நாடுகள் `பருவ நிலை நிதி`` உதவி ( Climate Finance) தருவது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













