You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி நோரியேகா காலமானார்
பனாமா நாட்டின் முன்னாள் சர்வாதிகாி அண்டோனியோ மானுவேல் நோரியேகா தனது 83 வயதில் காலமானார் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு ரத்த கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து நோரியேகாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நோரியேகா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருந்தார்; இருப்பினும் 1989 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் பனாமாவை படையெடுத்த போது அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை, ஊழல், மற்றும் கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தார் நோரியேகா.
மார்ச் மாதம் நடைபெறவிருந்த, மூளையில் ரத்த கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்துவதற்காக அவர் ஜனவரி மாதம் வீட்டுக் காவலில் விடுவிக்கப்பட்டார் அந்த முன்னாள் தலைவர்.
பெருமூளையில் ஏற்பட்ட ரத்தப் போக்கிற்காக அவர் மேலும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் ஆனால் திங்களன்று மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார் என நாட்டின் வெளியுறவுச் செயலர் அறிவித்தார்.
"நோரியேகாவின் இறப்பின் மூலம் வரலாற்றின் ஒரு பகுதி முடிந்துவிட்டது; அவரின் மகள்கள் மற்றும் உறவினர்களுக்காக அவரின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும்" என பனாவின் அதிபர் குவான் கார்லாஸ் வரேலா, டிவீட் செய்துள்ளார்.
இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், 1980களில் ஆறு வருடம் ராணுவ தலைவராக செயல்பட்டு பனாமாவின் நடைமுறையில் தலைவராக இருந்தார்
அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மத்திய அமெரிக்காவில் கம்யூனிசத்தின் தாக்கத்தை எதிர்க்க முயசித்த அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இருந்தார்.
ஆனால் பனாமாவில் இவரின் அடக்குமுறைகள் அதிகரித்தது குறித்து அமெரிக்கா சோர்ந்து போனது; மேலும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக இவர் ஈடுபட்டதாக அறிகுறிகள் வந்தன.
1988 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா நீதிமன்றம் அவரின் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டை சுமத்தியது.
1989 ஆம் ஆண்டு பனாமாவின் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவரை பிடிப்பதற்கு 28,000 படை வீரர்கள் ஜார்ஜ் புஷால் அனுப்பபட்டனர்.
பனாமா நகரில் உள்ள வத்திகானின் தூதரகத்தில் அவர் தஞ்சம் அடைந்தார்.ஆனால் அமெரிக்க படைகள், அதிக சத்தத்துடன் கூடிய இசையை வாசித்து அவரை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்