You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்
பிரபலமான பெண்கள், நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பது வழக்கமானதுதான். அதுவே மங்கலமான நிகழ்ச்சி என்றால், புடவை கட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கலாம், ஆனால் பீர் கடையை தொடங்குவதற்கு மாடர்ன் டிரஸ் போட்ட மங்கைகள் மட்டுமில்லை, பெண் அமைச்சர்களும் தயாராகிவிட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான ஸ்வாதி சிங் ஒரு பீர் கடையை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, சர்ச்சையும், பீர் பாட்டிலை திறந்த நுரை போல பொங்கிவிட்டது.
சமூக ஊடகங்களில் ஸ்வாதி சிங்கை வறுத்து எடுத்துவிட்டார்கள்.
பீர் கடை திறப்பு விழா புகைப்படம் வைரலாக பரவிவிட்டது.
மாநில அரசின் தந்திரம் என்பது உட்பட, பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"பீ த பீர்" என்ற பாரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த ஸ்வாதி சிங், பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மட்டுமல்ல, விவசாய ஏற்றுமதி போன்ற பல அமைச்சகங்களுக்கு பொறுப்பேற்றிருக்கிறார். மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவின் தலைவியும் ஆவார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக பேசி சர்ச்சைக்குள்ளான பாரதீய ஜனதா கட்சியின் தயாஷங்கர் சிங், 2016 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரின் மனைவிதான் ஸ்வாதி சிங்.
'முதன்முறை' வெற்றி
செல்வாக்குடன் இருந்த தயாசிங் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அவருக்கு பதிலாக அவரது மனைவிக்கு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
மாநில மகளிர் அணிக்கு தலைவியாகவும் முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சி, ஸ்வாதி சிங்கை நியமித்தது.
லக்னெளவின் சரோஜினி நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து முதன்முறையாக வெற்றி பெற்றார் ஸ்வாதி சிங்.
இந்தத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி முதன்முறையாக வெற்றிபெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சர் பதவியையும் பெற்றார்.
இப்போது முதன்முறையாக பீர் கடையை திறந்து வைத்து, முதன்முறையாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஸ்வாதி சிங்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்