You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?
ஃபிரான்ஸில் முன்னெப்போதுமில்லாத வகையில் நடைபெற்ற பிரசாரங்கள் நாட்டை பிரித்திருக்கும் நிலையில், அங்குள்ள வாக்காளர்கள் தங்களுடைய அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இரண்டாம் சுற்று போட்டியின் மையமாக, 39 வயதான முன்னாள் முதலீட்டாளரான இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரி தேசியவாதியான 48 வயதான மரைன் லெ பென் எதிர்த்து களம் காண்கிறார்.
வெளிநாடுகளில் வாழக்கூடிய ஃபிரெஞ்சு குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழக்கூடியவர்கள் வாக்களிக்க தொடங்கிவிட்டனர்.
பெருநகர ஃபிரான்ஸில் இன்று (ஞாயிறு) உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. 19.00 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.
ஆனால், சில பெரிய நகரங்களில் இரவு 8 மணி வரை உள்ளூர் நேரப்படி வாக்குப்பதிவு மையங்கள் திறந்திருக்கும். அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வெளியிடப்படப்பட உள்ளன.
ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், போட்டியிட்ட 11 போரில் இந்த இரு வேட்பாளர்களும் முன்னணி பெற்றனர்.
இருவரும் ஃபிரான்ஸ் குறித்த முற்றிலும் மாறுபட்ட உத்தரவாதங்களை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
தாராளவாத மையமாக விளங்கும் மக்ரோங் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ஆதரவாளர் மற்றும் வணிக சார்பு கொண்டவர். ஆனால், முதன்முதலாக பிரசாரத்தை மேற்கொண்ட லெ பென் குடியேற்ற எதிர்ப்பு திட்டம் குறித்து பேசினார்.
உள்நாட்டு பொருளாதாரத்தில் யூரோவை தடை செய்ய வேண்டும் என்று லெ பென் விரும்புகிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும் விரும்புகிறார்.
வாக்கெடுப்பில் மக்ரோங் வெற்றி பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வாக்களிப்பு சதவீதம் குறைந்தால், அவர் வெற்றி பெறும் வாய்ப்புகளை சேதப்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்