You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் மகா குண்டு இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது எப்படி?
ஆஃப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில், போரின் போது முதல்முறையாக அணு ஆயுதமல்லாத மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை அமெரிக்க ராணுவம் வீசியுள்ளது.
ஜிபியு-43/பி என்ற மாபெரும் வெடிகுண்டு (Massive Ordnance Air Blast Bomb - MOAB), ராணுவ மொழியில் " குண்டுகளுக்கெல்லாம் தாய்" என்றழைக்கப்படும் இது நேற்று (வியாழன்) வீசப்பட்டது.
இஸ்லாமிய அரசு என்று தங்களைஅழைத்துக் கொள்ளும் அமைப்பினர் அச்சின் மாவட்டத்தில் பயன்படுத்தி வந்த சுரங்கங்களின் பிணையம் இலக்காக வைக்கப்பட்டது.
இது ஆணு ஆயுதமாக இல்லாததால், எம்ஒஏபி குண்டை பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபரின் அனுமதி தேவையில்லை.
இந்த வெடிகுண்டு 30 அடி நீளமும், 9800 கிலோ எடையும் மிகப் பிரம்மாண்டமானது. ஜி பி எஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த வெடிகுண்டு எம் சி 130 சரக்கு விமானத்தின் கதவுகள் வழியாக குண்டு வீசப்பட்டு தரையை தொடுவதற்குமுன் வெடிக்க வைக்கப்பட்டது.
விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடிகுண்டின் பக்கங்களில் பாராசூட் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது ஆயுதத்தை காற்றில் சறுக்கிக் கொண்டு செல்ல, நான்கு கிரிட் போன்ற துடுப்புகள் வெடிகுண்டை நிலைப்படுத்தவும், வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்டது.
அதன் முதன்மை விளைவானது மிகப்பெரிய வெடிப்பு அலையை ஏற்படுத்துவது.
இதிலுள்ள 18,000 பவுண்டுகள் கொண்ட டி என் டி ஒவ்வொரு திசையிலும் சுமார் ஒரு மைல் தூரம் வரை வெடிப்பு அலைகளை நீட்டிச் செல்லும் திறன் படைத்தது.
இந்த வெடிகுண்டின் மெல்லிய அலுமினிய கவசம், வெடிப்பினால் ஏற்படும் தாக்கத்தின் பரப்பளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது.
நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளையும், சுரங்கப் பாதைகளையும் தகர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தது,
இராக் போரில் பயன்படுத்துவதற்காக இந்த ஆயுதம் தயாரிக்கப்பட்டது.
இதன் ஒன்றின் தயாரிப்பு செலவானது சுமார் 16 மில்லியன் டாலர்கள் என கூறப்பட்டது.
2003ல் முதன்முறையாக சோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டானது தற்போதுவரை போரில் பயன்படுத்தப்படவில்லை.
மேலும், எம் ஒ ஏ பி மட்டுமே அமெரிக்க ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதமில்லா வெடிகுண்டு அல்ல.
அமெரிக்காவை போன்றே ரஷ்யாவும் அதன் சொந்த மரபுவழி வெடிகுண்டை தயாரித்துள்ளது. அதற்கு 'குண்டுகளின் தந்தை'' என்று செல்லப் பெயர் சூட்டியுள்ளது.
எஃப் ஒ ஏ பி எரிபொருள் காற்று ரகத்தை சேர்ந்த வெடிகுண்டாகும். தொழில்நுட்ப ரீதியாக உயரழுத்த ஆயுதம் என்று அறியப்படுகிறது.
உயரழுத்த வெடிகுண்டுகள் பொதுவாக இரு நிலைகளில் வெடிக்கும்.
எம் ஒ எ பி வெடிகுண்டை அலபாமா சார்ந்த வானியல் நிறுவனமான டைநெட்டிக்ஸ் மேம்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்