42,000 அடி உயர விமானத்தில் பிரசவம் பார்த்த விமானக் குழு

42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர் அந்த விமானக் குழுவினர்.

அந்த விமானம் கின்னியாவின் தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புல்லிற்கு சென்று கொண்டிருந்தது.

தாய் மற்றும் கடிஜு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை புர்கினோ ஃபாசோவின் தலைநகரில் விமானம் தரையிறங்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருவரும் உடல் சோர்வுடன் இருந்தாலும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி: உறைநிலை திசுக்களிலிருந்து உயிர்பெற்ற உலகின் முதல் குழந்தை

"28 வாரமாகும் நஃபி டியாபி என்ற அந்த பெண் பயணி, பிரசவ வலியால் அவதிப்பட்டதை அந்த விமான குழு கவனித்தது" என துருக்கிய விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"விமான பயணத்தின் போது அவர் குழந்தை பெற விமான குழு உடனடியாக உதவி செய்தனர்."

பெரும்பாலுமான விமான சேவைகள், 36 மாத வரையிலான கர்பிணி பெண்களை அனுமதிக்கின்றனர்; ஆனால் 28 மாதத்திலிருந்து உள்ளவர்கள் அவர்கள் குழந்தை பெறும் தேதியை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவரின் கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.

காணொளி: ஒரு குழந்தை மூன்று பெற்றோர்

காணொளி: சீனா: குழந்தை பெறுவதற்காக தலைமறைவாகும் பெற்றோர்

காணொளி: சீனா : பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தாயாகும் லட்சக்கணக்கான பெண்கள்

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்