இமயமலையின் குழந்தை துறவியர் (புகைப்படத் தொகுப்பு)

இமயமலையின் உயரமான இடத்தில், உயர் மலைத்தொடர்கள் என்று அறியப்படும் லடாக்கில் லேக்கு அருகிலுள்ள 15 ஆம் நூற்றாண்டு திக்செ மடாலத்தில் மெரூன் நிறத்தில் ஆடைகள் அணிந்த இளம் புகுமுக துறவியர் பாடங்களை கற்று கொள்கின்றனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய எல்லையில், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி இதுவாகும்.

பாறையில் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள வெள்ளை அடிக்கப்பட்ட பாதுகாப்பு அரண் கொண்ட, மலைத்தொடர்களுக்கு அப்பால்,சிந்து வெளி பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்க்க்கூடிய நெஞ்சை அள்ளும் காட்சிகளோடு அமைந்துள்ள திக்செ, திபெத்திய பௌத்த மதத்தின் "மஞ்சள் தொப்பி" அல்லது கெலுக்பா பிரிவோடு இணைந்திருக்கும் ஒரு மடாலய சமூகத்தின் தாயகமாகும்.

திபெத்திய பௌத்தம் என்பது தாயகத்தில் இருந்து நாடு கடந்த நிலையில் கடைபிடிக்கப்படும் மதமாகும். திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு இதுவாகும். தங்களுடைய கலாசாரம், மொழி மற்றும் மதம் பற்றி கற்றுகொள்ள இந்தியாவில் வாழும் திபெத்திய குடும்பங்கள் தங்களின் குழந்தைகளில் ஒன்றையாவது இந்த மடாலயத்திற்கு அனுப்பி வருகின்றன.

திபெத்திய பௌத்த மதத்தை புரிந்து கொள்ளுவதற்கு காட்சி உதவிக் கருவிகள் மிகவும் பிரபலம். படங்கள், பல்வேறு வித அமைப்புக்கள், பொது பிரார்த்தனை சக்கரங்கள், கொடிகள் ஆகியவை உலகில் ஆன்மீக சக்தி எப்போதும் இருப்பதை நினைவூட்டுகின்றன.

தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் பாரம்பரியத்தை கொண்டது பௌத்தம். கடவுள்கள் அல்லது தேவதைகளை பௌத்தவர்கள் வணங்காமல், வாழ்க்கையின் உண்மையான இயல்பில் ஆழமான உள்ளுணர்வு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்