You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
6 மனைவிகள், 54 குழந்தைகள்: `பெரிய்ய...' குடும்பஸ்தர்!
பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒருவருக்கு 54 குழந்தைகள் பிறந்துள்ளது தெரியவந்தது.
அப்துல் மஜீத் என்பவருக்கு 54 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் 12 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில், தற்போது 42 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார் அப்துல் மஜீத்.
பலூசிஸ்தான் மாகணத்தில், நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹாஜி அப்துல் மஜீதின் தற்போதைய வயது 70 என்று பி.பி.சி செய்தியாளர் மொஹம்மத் காஜ்மி தெரிவிக்கிறார். அப்துல் மஜீத் ஓட்டுநராகப் பணியாற்றியவர்.
குவெட்டாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கில் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் நுஷ்கி மாவட்டம் அமைந்துள்ளது.
அப்துல் மஜீத் ஆறு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதில் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர், தற்போது நான்கு மனைவிகளுடன் வசித்துவருகிறார்.
22 மகன்கள், 20 மகள்கள் என 42 குழந்தைகள் மற்றும் நான்கு மனைவிகளைக் கொண்ட அப்துல் மஜீத் தான் பெரிய குடும்பத்தைக் கொண்டவராக இருக்கிறார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்னர், 36 குழந்தைகளுக்கு தந்தையான ஜான் மொஹம்மத் கில்ஜி தான் அதிக குழந்தைகள் பெற்றவர் என்று குவெட்டா நகரவாசிகள் கூறிவந்தனர்.
இப்போது அதிக குழந்தை பெற்றவர் பட்டியலில் அப்துல் மஜீத், எளிதில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த செய்தியும் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்