பந்தய புறாக்கள் (புகைப்படத் தொகுப்பு)

துருக்கியின் தென்கிழக்கில் சான்லியுர்ஃபாவில், நாற்காலிகள் வட்டமாக போடப்பட்டிருக்கும் இந்த இடத்தின் மத்தியில் புறாக்கள் நிறைந்திருக்கும் கூண்டு ஒன்று இருக்கிறது. அருகில், "தேசிய மிகவும் அழகான புறாக்களின் போட்டி" என்ற நடந்து முடிந்த ஒரு நிகழ்வின் விளம்பரப் பதாகை.

இங்கு புறாக்கள் வைத்திருப்போருக்கும் , வளர்ப்போருக்கும் இந்தப் புறாக்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த பிரதேசத்திலும். சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள இடம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றதொரு பொழுதுபோக்காகும்.

புறக்காளை வளர்ப்போரில் இஸ்மாயில் ஒஸ்பெக் ஒருவர்.

எச்சரிக்கை மணிகள் மற்றும் சிசி டிவி கேமராக்களும் பொருத்தப்பட்ட ஒரு பரணில் அவற்றின் பாதுகாப்பை அவர் பராமரித்து வருகிறார்.

ஒஸ்பெக் இந்த பந்தய புறாக்களுக்கு ஐனாலி, காரா அலெக, கிரிக் டெலி மற்றும் இஸ்பிர் என கவித்துவம் மிக்க பெயர்களை சூட்டியிருக்கிறார்.

சிறிய மணிகள் மற்றும் உலோக குண்டுகள் அவற்றின் கால்களை அலங்கரிக்கின்றன. சில புறாக்கள் அவற்றின் இறகுகளில் வெள்ளி அணிகலன்களையும் அணிந்துள்ளன.

குர்து இன கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைப்பரிவுகளுக்கு இடையில் நடந்த சமீப மோதல்கள் மற்றும் இப்பிரதேசத்தில் நிலவும் அமைதியின்மை ஆகிய சூழ்நிலைகளிலும், இந்த புறாக்கள் ஏலத்தின்போது, அதிக தொகைக்கு செல்கின்றன.

ஒஸ்பெக்கின் புறாக்களில் மிகவும் கிரக்கி மிகுந்த புறாக்களில் ஒன்று, 1,500 துருக்கி லிரா (320 பவுண்ட்) பெறுமதியானது.

ஏலமிடுகின்ற இம்ரான் டில்தாஸ் ஒரு புறா ஜோடியை ஒரு முறை 35,000 துருக்கி லிராவுக்கு விற்பனை செய்துள்ளார்.

"இதுவொரு விட்டுவிட முடியாத அதீத விருப்பம், ஒரு பொழுதுபோக்கு" என்று தில்தாஸ் தெரிவித்திருக்கிறார்.

புறாக்களுக்கு உணவளிக்க "என்னுடைய குளிர்பதனப்பெட்டி மற்றும் மனைவியின் தங்க வளையல்களை விற்றிருக்கிறேன்" என்கிறார் தில்தாஸ்

சிரியாவின் எல்லை 30 மைல்கள் தூரத்தில் இருக்கும் நிலையில், மோதல்கள் அதிகரித்தபோது, சிறந்த புறாக்கள் துருக்கிக்குள் வந்துவிட்டன . அதிக புறாக்களின் வரவால், விலை குறைந்தது. ஆனல் மோதல்கள் அதிகரித்தவுடன் இந்த புறாக்களின் விலையும் அதிகரித்தது.

ஏலத்தின் முடிவில், தில்தாஸ் 13,000 லிரா (2,750 பவுண்ட்)பெறும் அளவுக்கு பல புறாக்களை விற்றுள்ளார். அவருடைய தரகு தொகை 10 சதவீதம்.

மேலதிக புகைப்படத் தொகுப்புகளுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்